பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 ஆனந்த முதல் ஆனந்த வரை வெளியூர் திருக்கோயில் விழாக்களில் நடைபெறும் சொற் பொழிவுகளிலும் பங்கு கொண்டேன். ஒருமுறை திருச்செந் தூர்ச் சென்று இரண்டு மூன்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்தேன். அப்படியே கோவை முதலிய இடங்களுக்கும் சமய மாநாடுகளுக்குச் சென்று வந்தேன். இவற்றுக்கிடையில் பள்ளிப்பணிக்கு மட்டும் நான் சேர்ாந்ததே இல்லை. பள்ளியில் விடுமுறை எடுத்துக் கொண்டு வேறு பணிக்குச் செல்லவில்லை. மாவட்டக்கழகக் கூட்டங்கள் பெரும்பாலும் பள்ளி நாட்களில் வரும். அதற்கென மட்டும் திங்களுக்கு ஒருமுறை மாலை வேளைகளில் நான் விடுமுறை பெற்றுச் செல்வது வழக்கம். தேர்தலுக்குப் பிறகு பல நண்பர்கள் எனக்கு அறிமுக மாயினர். அவருள் ஒருவர் காளப்பர். அவர் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கட்டணம் வசூலிக்கும் பணியில் ஊதியம் பெற்றுக் கொண்டிருந்தார். அவருடைய தமிழ்ப் பற்றும் தேவாரப் பாடல்களை இனிமையாகப்பாடும் திறனும் என் உள்ளத்தில் பதிந்தன. அவரை உயர்த்த வேண்டுமெனத் திட்டமிட்டேன். அப்படியே என்னிடம் பயின்ற இராச கோபால் என்பவர் படித்தபின் வேலையற்று இருந்தார். (அவர் இன்று இல்லை, இளமையிலேயே மறைந்து விட் டார்.) எனவே நாங்கள் மூவரும் சேர்ந்து அச்சகம் ஒன்றினை நிறுவலாம் என நினைத்தோம். அதற்கு முன்னரே, தேர்தல் முடிந்த உடனேயே நான் என் சொந்தப் பொறுப்பில் என் மைத்துனர் உக்கல் வடிவேலு அவர்களைப் பதிப்பாளராக்கி நான் ஆசிரியராக இருந்துகொண்டு, தமிழ்க் கலை என்ற திங்கள் இதழைத் தொடங்கி நடத்தி வந்தேன். அக்காலத் தில் அதிக இதழ்கள் இல்லாமையும் இந்தி எதிர்ப்பு இயக்கத் தின் வலுவும் சேர்ந்து என் இதழுக்கு ஏற்றம் தந்தன. இத் தமிழ்க்கலை இதழினைப் பற்றிப் பேரறிஞர் அண்ணா அவர்கள், "நாட்டில் நம் கொள்கையைப் பரப்ப நல்ல