பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 243 இதழ்கள் இல்லை என்று நைந்து கடிதம் எழுதிய கலைஞர் T. K. சண்முகம் அவர்களுக்குப் பதில் எழுதிய வகையில் குறிப் பிட்டார். (அது பற்றி T. K. சண்முகம் அவர்தம் மணி விழா மலரைப் பார்த்த பிறகே நான் அறிந்து கொண்டேன்.) நான்கைந்து திங்கள் நடத்திய பிறகுதான் பிற அச்சகங் களில் அச்சிடுவதால் உண்டான சில தவிர்க்க முடியாத தொல்லைகள் புலனாயின. எனவே நமக்கெனவே ஓர் அச்சகம் நிறுவ நினைத்தேன். அதே வேளையில்தான் காளப்பரும் இராசகோபாலரும் நினைவில் வந்தனர். அவர்களோடு என் மைத்துனரையும் இணைத்துக்கொண்டேன். வேறு ஒரு 'காங்கிரஸ் பிரமுகர்’ தாமே வலிய வந்து அச்சகத்தில் பங்கு பெறுவதாகக் கேட்டார். மறுத்தால் தொல்லை விளையுமே என்று அஞ்சிச் சேர்த்துக்கொண்டோம். அவரால் சில சமயங்களில் தொல்லை அடைவோம். நல்லவேளை தமிழ்க் கலை"யைத் தனியாகவே வைத்திருந்தமையால், அவரால் அதைப்பற்றி ஒன்றும் கேட்க முடியவில்லை. சில இதழ் களில் இந்தி எதிர்ப்பின் வலு நன்கு காட்டப்பெற்றிருக்கும். அது கண்டு அவர் அலறுவார். அதற்கு நான் என் செயக் கூடும்? சில ஆண்டுகள் கழியுமுன்பே அவரே விலகிக் கொண்டார். எங்கள் எல்லாரைக் காட்டிலும் அவர் சற்றே செல்வத்தில் உயர்ந்தவராக இருந்தமையால் நாங்களும் தூர விலகுவதே நல்லதென்ற முடிவில் அவரை அனுப்பி வைத் தோம். அதனாலேயே இன்றளவும் அவர் எங்கள் நண்ப ராகவே இருந்து வருகிறார். - . தமிழ்க்கலை நாட்டிற்கும் மொழிக்கும் நல்ல சேவை செய்தது. அப்படியே தமிழ்க்கலை அச்சகமும் நன்கு பொது மக்களுக்கு உதவிற்று. அதைத் தொடங்கும்போது குமரன் அச்சக உரிமையாளர் திரு. தவசி. குப்புசாமி முதலியார் அவர் களை அணுகினேன். அவர்கள் அதைத் தொடங்குவதற்கு வேண்டிய எல்லாத்துறைகளையும் விளக்கி, வேண்டிய உதவி