பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 245 காலத்தில் நான் சென்னை வந்த பிறகும் அதே நிலை நீடித் தது. என் பெண்கள் மண இதழில் அவர் பெயர் வரவேற் பாளர் வரியில் இடம் பெற்றிருந்தமையை அவனவரும் அறிவர். அவர் திருமகனார் திருமணத்துக்குச் சீகாழிவரை யில் சென்று வாழ்த்தியும் வந்தேன். ஆயினும் ஏதோ காரணத்தால் என் மகன் திருமணத்துக்கு அவர் வராது நின்றார். பிறகு எங்கள் நட்பு எங்கேனும் கண்டால் பேசுவது என்ற அளவில் நின்றது. அச்சகத்தில் பணியாற்றிய காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகள் என்முன் நிழலிடுகின்றன. என் மைத்துணியின் வாழ்வில் ஒரு நீக்கமுடியாத களங்கம் ஏற்பட்டது. என் மாமனாரும் மற்றவர்களும் அதே சோக நிலையில் செய்வதறி யாது மூழ்கினர். அந்த வட்டாரத்தில் அவர்கள் குடும்பம் சிறக்க வாழ்ந்த குடும்பம், அதில் சிறு குறை கண்டாலும் பெரிதாகுமே என வருந்தினர். அந்த வேளையில் நான் என் நண்பர்கள் துணைகொண்டு அந்தக் களங்கத்தை நீக்கப் பாடு பட்டு வெற்றியும் கண்டேன். அவரை எனக்கு முன்னமே உறவு வழியில் அறிமுகமான ஒருவருக்கு-அவரே விரும்பிக் கேட்க-மணம் முடித்து வைத்தேன். அவர்கள் இன்றும் இனிமையாக வாழ்கிறார்கள். அந்த முயற்சியில் நானும் அன்பர் காளப்பரும் அடைந்த தொல்லைகள் பலப்பல. சிலவிடங்களில் பெரும் அச்சமும் கொள்ளவேண்டி இருந்தது. எப்படியோ எங்கள் முயற்சி வெற்றிபெற்றது. என் அன்னையர் இருவரும் அதுபோது காஞ்சியிலேயே இருந்தனர் அவர்கள் என் செயல்கண்டு மகிழ்ந்தனர்-போற்றினர். என் மாமனார் வீட்டார் என் தேர்தல் காலத்தில் செய்த அத்துணைப் பேருதவிகளுக்கும் மாற்றாக இந்த உதவி அமைந்துவிட்டதென்று அவர்கள் கூறினர். ஆம்! யாருக்கும் அவர்கள் உதவி செய்த கடனை வைத்துக்கொள்ளக் கூடாது என்பதும் அது எப்படியும் எவ்வகையும் திருப்பித்தரப் பெற