பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 ஆனந்த முதல் ஆனந்த வரை முழுதும் நான் பள்ளிக்கூடம் செல்லவில்லை. உலகமே திரண்டு வந்துவாடிய அந்த நாளிலும் முன்னவளும் பேரனாகிய மயில்வாகனனும் அருகில் கூட வரவில்லை. அன்னையாரின் இறுதிச் சடங்குகள் விழாவென நடை பெற்றன. திரு.வி.க, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், C.M. இராமச்சந்திரன் செட்டியார், ரா.பி. சேதுப்பிள்ளை, சுந்தர ஒதுவா மூர்த்திகள், சச்சிதானந்தம் பிள்ளை, புரிசையார் இன்னும் பல பெரியவர்கள் அந்த இறுதிநாள் சடங்கில் பங்குகொண்டு அதை ஒரு விழாவாக எங்களுரில் கொண் டாடினர். எனது ஆற்ற முடியாத துன்பத்தை அத்தகைய பெரியவர்தம் வருகையாலும் வாழ்த்தாலும் ஓரளவு பொறுத்துக்கொண்டேன். என் பள்ளியின் தலைமை ஆசிரியர் என் துன்பத்தைக் கண்டு நான் அந்த ஆண்டு முழுவதும் பள்ளிக்கு வரவேண்டாம் என்று சம்பளத்துடன் விடுமுறை அளித்தார். அன்னையின் மறைவுக்குப் பின் நான் எங்கும் அதிகமாக வெளியில் செல்லுவதில்லை. எந்த விழாவிலும் பங்குகொள்வதில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடப்பேன். அடிக்கடி என் பெரிய அன்னையார் கூறிய ஆறுதல் மொழிகள் ஒரளவு தேற்றும். . இதற்கிடையில் ஊரில் மகன் வாழ்வு மங்கி வருவதை அறிந்தேன். அவர்கள் வறுமையுற்ற காரணத்தால் சரியான உணவைத் தாராததோடு தக்க வைத்தியமும் செய்யவில்லை என அறிந்தேன். ஒருமுறை நான் பார்க்க அவர்கள் வீட்டிற்கு வருவதாகச் சொல்லி அனுப்பினேன். அவர்கள் வரக் கூடாது எனத் தடுத்தனர். சென்றால் வேறு கொடுமைகள் நிகழுமென அஞ்சித் திரும்பினேன், மற்றொரு முறை நான் தெரு வழியாகச் சென்றபோது அவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். நான் எங்கே கண்டு கொண்டுவந்து விடுவேனோ என்று கருதி அவன் பாட்டனார். என்னைத் தூரத்தே கண்டதும் எடுத்து உள்ளே ஒடிவிட்டார். இப்படி என் மகனை நானே பார்க்க முடியா நிலையில்