பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 ஆனந்த முதல் ஆனந்த வரை எங்கள் நிலங்களைப் பல ஆண்டுகளாக மற்றவர் குத்தகைக்குப் பயிரிட்டுப் கொண்டிருந்தமையின், பக்கத்தில் இருந்த நிலச் சொந்தக்காரர்கள் மெல்லமெல்ல வெட்டி வெட்டித் தம் நிலத்தொடு சில பகுதிகளைச் சேர்த்துக் கொண்டிருந்தனர். ஒருவர் ஒரு பெரும் வயலையே தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருந்தார். நான் அளந்து இந்த உண்மைகளையெல்லாம் கண்ட பிறகு அவர்கள் அனைவரும் உரியவற்றை ஒதுக்கி விட்டுவிட்டார்கள். ஒருவர் மட்டும் வாதாட நினைத்தோ ஏனோ காஞ்சிபுரம் சென்று வழக் கறிஞர்களைக் கலந்துகொண்டுவந்து பிறகே ஒப்படைத்தார். ஊரில் வெற்றிடமாயிருந்த சிலவற்றை மாற்றித் தென்னங் கன்றுகள் மாங்கன்றுகள் இட்டு வளர்த்தேன். அம்மா, பெரியம்மா பிரிவால் பிரிந்திருந்த பல நிலககளை ஒன்று படுத்திப் பயிரில் சில மாற்றங்களைச் செய்ய நினைத்தேன். ஊரிலேயே நல்ல முறையில் ஒற்றுமையை உண்டாக்கி, நல்ல வகையில் பயிர்த்தொழிலை மேற்கொண்டு மக்களை ஒன்று படுத்த முயன்றேன். பல கூட்டங்களை ஊரில் கூட்டினேன். எனினும் அவை ஒன்றும் பயன்படவில்லை. மாறாக ஊரில் பயிரிடும் பண்பு குறைந்து வந்தது. பிற்காலத்தில் நானும் என் நிலத்தின் பல பகுதிகளை விற்று, சென்னையில் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு வீடுவாங்கித் தந்துவிட்டேன். தற்போதும் எல்லா வசதிகளும் இருந்தும் ஊரில் பயிர்த் தொழில் சரியாக நடைபெறவில்லை. பள்ளியில் எனக்கு விடுமுறை கிடைத்ததால் ஊரில் சில நாட்கள் தங்க வாய்ப்பு உண்டாயிற்று. எனினும் விரைவில் நான் காஞ்சிபுரம் வந்து விட்டேன். அப்போது நமது நாடும் தீவிரமாகப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்ந்தது. ஆகவே அக்காலத்தில் சென்னை மாநிலமும் தன் பங்கைத் தந்துக்கொண்டிருந்தது. மாவட்டக் குழுக்கள்-வட்டக்குழுக்கள் இவ்வாறு பல்வேறு