பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 ஆனந்த முதல் ஆனந்த வரை மானவர்களும் அந்த கூட்டத்திற்காகச் சென்னை வந்தோம். குதிரைப் பந்தயத்தின் கொடுமையைப் பல முறையில் கேட் டிருக்கிறேன். நானே என் தமிழ்க் கலையில் அது பற்றி எல்லாம்-அதனால் மக்கள் நைந்துபோகும் நிலைபற்றி எல்லாம் எழுதி இருக்கிறேன். காங்கிரஸ்காரர்களும் தாங்கள் பதவிக்கு வந்தால் அதையே முதலில் ஒழிக்கப்போவதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் இருபது ஆண்டுகள் பதவியில் இருந்த காலத்து அதை வளர்த்து வந்தார்களே யன்றி வேறு ஒன்றும் செய்யவில்லை. இன்றைய அரசாங் கமும் அதை வளர்க்கவே துணை நிற்கின்றது. அதை நடத்து கின்றவர் நாட்டிலுள்ள பெருஞ் செல்வர்கள் என்றும் அவர் தம் தயவை நாடியே எந்த அன்மச்சரவையும் செயலாற்றுகிற தென்றும் ஆகவே யார் வந்தாலும் அதை ஒன்றும் செய்ய முடியாது என்றும் பலர் காரணம் கூறக் கேட்டறிந்தேன். அந்தக் காலத்திலெல்லாம் அதன் கொடுமையை மட்டும் ஒரளவு உணர்ந்திருந்தமையின் அங்கே நடைபெற்ற கூட்டத் துக்குச் செல்ல அஞ்சினேன். எனினும் மற்றவர்களோடு சென்று கூட்டத்திலும் கலந்துகொண்டேன். கவர்னருக்கும் அறிமுகம் செய்துவைக்கப் பெற்றேன், அக்காலத்திலெல்லாம் கவர்னர்களைக் காணுவதோ பேசுவதோ அவ்வளவு எளி தன்று. எனவே எனக்கு அது பெருமை என்று பலர் கூறிக் கொண்டனர். ஊரில் உள்ள உறவினர் பலர் பாராட்டினர். எனினும் நான் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. அதுகாலை செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியாளர் (Collector) திரு. செட்டுர் என எண்ணுகிறேன். என் கூட் டங்கள் பலவற்றிற்கு அவர் தலைமை வகித்துள்ளார். அவர் கள் எனது பணிகளை யெல்லாம் கண்டு என்ன நினைத்தார் களோ அறியேன். ஒருநாள் தாசில்தார் துவாரகாநாதஐயர் அவர்கள் திடீரென என் வீட்டிற்கு வந்தார்கள். காலையில் ஏதோ பணியில் ஈடுபட்டிருந்தேன். என்னைப் பெயரிட்டு