பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஆனந்த முதல் ஆனந்த வரை விட்டு, பூந்தோட்டத்திற்குச் செல்வார்கள். அவர்கள் காலைதோறும் மலர்கள் கொண்டுவந்து பகலில் கட்டி மாலை யில் கோயிலுக்குக் கொண்டு சென்று கொடுப்பார்கள். அவர் களை இது குறித்துச் சிலர் பண்டாரப்பாட்டி என்றுகூடக் கேலி செய்வார்கள். எங்கள் ஊரில் கோயிலுக்கு மலர் கொண்டு கொடுப்பவர்கள் பண்டாரங்கள்தாம். அவர்கள் அதற்காக மானியம் பெறுவார்கள். ஆனால் என் பாட்டி அன்பினால் ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டினையும் பண்டாரத்தொண்டு எனக் கிண்டல் செய்வது அவ்வூரில் சிலரது வழக்கமாக இருந்ததாம். எனினும் பாட்டியார் மனங் கோணாது தவறாது தன் தொண்டைச் செய்து வந்தார்கள். நான் அவர்கள் பக்கத்திலேயே படுத்துத் தூங்குவேன். எனவே அவர்களோடு எழுந்து பல்துலக்கிக்கொண்டு, நானும் காலையில் பூப்பறிக்கச் சென்றுவிடுவேன். திரும்பிவர மணி ஏழுக்கு மேலாகிவிடும். வந்ததும் வீட்டில் அம்மா காலை எழுந்து படிக்காது போய்விட்டதற்காகத் திட்டுவார்கள். நான் ஆற்றுக்கு ஓடி விடுவேன். குளித்து வந்து பிறகு படித்துச் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் சென்றுவிடுவேன். வீட்டில் என் தாத்தா இறந்த பிறகு-என் ஐந்து வயதுக்கு மேல்-அவருடன் ஒன்பது மணிக்குச் சுடச்சுடச் சாப்பிட்ட நிலை மாறிவிட்டது. காலையில் பழையது போடுவார்கள். ஊறுகாயுடன் பழையதைச் சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கு ஒடி விடுவேன். என் பாட்டி என் வாழ்வில் மிகுந்த அக்கறை காட்டு வார்கள். அதனால் சில சமயங்களில் என் அம்மாவுடன் 'சண்டை போடுவதுகூட உண்டு. என் அம்மாவுக்கும் பாட்டிக்கும் என்னை வளர்ப்பதின் நோக்கம் ஒன்றாக இருந் தும் வளர்க்கும் முறையில் வேறுபாடு உண்டு. அம்மா என்னை நன்றாக அடித்து உதைத்து வளர்த்து நல்லவன் ஆக்க வேண்டும் என்று நினைப்பார்கள். பாட்டியோ அடிக்