பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 - ஆனந்த முதல் ஆனந்த வரை எனவே அந்தக் குறிப்பிட்ட கூட்டத்துக்கு நான் செல்ல வில்லை. அவருக்கும் பதில் எழுதவில்லை. கூட்டம் முன் ஏற்பாட்டின்படி தீர்மானத்தை நிறைவேற்றிக் கலைந்து விட்டது. மாவட்டக் கழக ஆட்சி கலெக்டர் கையில் வந்தது. உடன்-ஒருவாரத்துக்குள் என எண்ணுகிறேன். மாற்றுக் கழகம் பொறுப்பேற்குமெனவும் அதில் உறுப்பினர் யார் யார் என்றும் பத்திரிகைச்செய்தி வரக்கண்டேன். நல்லவேளை அதில் என்பெயர் இல்லை. பின்பு ஒரு கூட்டத்தில் என்னைக் கண்ட கலெக்டர் அக்கூட்டத்துக்கு வந்திருந்தால் நானும் தொடர்ந்து உறுப்பினனாக இருந்திருக்கலாமே என்று சொன்னார். நான், அதனாலேயே அக்கூட்டத்துக்கு வர வில்லை என விளக்கினேன். என் உள்ளம் அவர் நன்கு அறிந்த ஒன்றாதலால் அவர் புன்சிரிப்போடு அமைந்துவிட்டார். அதே காலத்திற்குச் சற்றுமுன் நடைபெற்ற மற்றொன் றும் நிழலிடுகின்றது; அவ்வாறு கழகம் கலைக்கச் சில தினங் களுக்குமுன் என எண்ணுகிறேன். தாம்பரம் நகர் அமைப்பு எங்கள் கழகச் சார்பில் அமையத் தொடங்கிற்று. பல ஏக்கர் நிலங்களை வாழ் மனையாக்கிப் பலருக்குப் பகிர்ந்து கொடுத்து, புதுப்புதுத் தெருக்கள் அமைத்தனர். அத் தெருக் களுக்கெல்லாம் அக்காலத்தில் கழக உறுப்பினர்களாகிய எங்கள் பெயர்களை இடவேண்டுமெனவும் முடிவு செய்தனர். ஆயினும் நான் தனியாக எங்கள் கழகத் தலைவர் திரு. துரை சாமி ரெட்டியார் அவர்களை, ஆலந்துாரில் அவர்கள் வீட்டில் கண்டு என் பெயரை எந்தத் தெருவிற்கும் வைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டேன். அவர்கள் முதலில் மறுத்த போதிலும் பிறகு இசைந்தார். அதனாலேயே தாம்பரம் பெரியார் நகரில் என்னுடன் இருந்த உறுப்பினர் பெயர்களி லெல்லாம் தெருக்கள் இருக்க என் பெயரில் மட்டும் தெரு இல்லா நிலை தோன்றிற்று, பின் கேட்ட பல அன்பர்களுக்கு T tt aGG S aTT AMGHHH SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS