பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை - 263 போர் வரவர அதிகமாகிக் கொண்டே வந்தது. உலக மக்கள் அனைவரும் அஞ்சினர். மக்களுக்கு வாழ்க்கைப் பொருள்கள் கிடைக்கா நிலை உண்டாயிற்று. பொருளாதார நெருக்கடி காரணமாகப் போருக்குமுன் மக்கள் குறைந்த விலையில் எல்லாப் பொருள்களையும் பெற்று வந்த நிலை மாறி, அனைத்தும் விலை ஏறியும் கிடைக்கா நிலைமை உண்டானமையால் மக்கள் வருந்தினர், அரசாங்கத்தார் எவ்வளவோ முயற்சிகள் செய்து கூடிய வரையில் மக்கள் வாழ்வின் இன்றியமையாத் தேவைகளைத் (உடை, உணவு) தந்து உதவினர். எனினும் உலகிலும் ஊரிலும் வீட்டிலும், உள்ளத்திலும், உணர்விலும் எங்கும் அமைதியற்ற பெரு நிலையே காணப்பெற்றது நானும் அவற்றினிடையே பள்ளிப் பணியையும் போர் மாற்ற அமைதிப் பணிகளையும் ஆற்றி வந்தேன். இந்த நிலையில் எனக்கு ஒய்வு அதிகமே கிடைத்தது. வீட்டில் குழந்தை மங்கையர்க்கரசியோடு விளையாடிப் பொழுது போக்குவேன். நேரம் அதிகமாக வீணாவதைக் குறித்துப் பலநாள் எண்ணியதுண்டு. அச்சகத்திலும் பொறுப் பாளர் இருவர் இருந்தமையின் எனக்கு அச்சகப் பணிகள் இல்லை. போரின் காரணமாகத் தாள் தட்டுப்பாடு உண்டாக, தமிழ்க்கலை வெளியீடும் நிறுத்தப்பெற்றது. எனினும் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. அந்த நிலையில்தான் மேலே படித்தால் என்ன என்ற எண்ணம் உண்டா யிற்று, 1942இல் மேலே படிக்கத் திட்டமிட்டேன். எனினும், இடையில் சில ஆண்டுகள் வேறு துறைகளில் கழிந்துவிட்டமை யின் படிப்பில் கருத்துச் செல்லுமோ என அஞ்சினேன். அதிலும் ஆங்கிலப் பாடங்கள் அதிகமாகப் பயிலவேண்டியதை நினைந்தேன். ஆரம்பத்தில் கிராமப் பள்ளிகளிலேயே படித்த காரணத்தால் எனக்கு ஆங்கில அடிப்படை இல்லை. எனவே பயிலத் தயங்கினேன். எனினும் சிறிய காஞ்சிபுரத்தில் இருந்த ஓர் ஐயங்கார்-அவர் தனிப்பாடம் சொல்லியே வாழ்பவர்