பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 ஆனந்த முதல் ஆனந்த வரை முதலியவற்றைப் பாராட்டினேன். இயேசு பெருமான் பல உண்மைகளைச் சில தெளிந்த உதாரணங்களால் எடுத்துக் காட்டும் சிறப்பினைப் போற்றினேன். என்றாலும் எனக்கு உள்ளத்தில் ஓர் எண்ணம் உண்டு. எந்தச் சமயத்தவனும் அவ்வச்சமய உண்மைகளை உணர்ந்து பின்பற்றவில்லை என்பதுதான் அது. ஒருபுறம் கிறித்துவ நெறிபற்றிய நூல் களில் நான் ஈடுபாடு கொண்டேன் என்றாலும் மறுபடியும் சில கிறித்தவர் தம் வாழ்க்கை நெறியைக் கண்டு-அதுவும் வழிகாட்ட வேண்டியவரே வழுக்கிவிழும் வழியைக் கண்டு - வெறுக்கவே செய்தேன். இந்தநிலை எல்லாச் சமயங்களிலும் இருப்பதறிந்து நீக்க வழியில்லையா?” என நெடிது நினைந்து நைந்த நாட்கள் பல. நான் காஞ்சியில் சேர்ந்தபோது பள்ளிப் பொறுப்போடு கிறித்து பெருமான் அன்புச் சமயப் பணிகளையும் ஏற்று இருந் தவர் மக்ளின் என்னும் துரைமகனார் ஆவர். அவரும் அவர்தம் துணைவியாரும் - மக்கள் இல்லை என நினைப்புஇராப்பகல் அற்ற நிலையில் தம் சமயம் வளர்க்கப் பாடுபட் டனர். காஞ்சி விழவறாக் காஞ்சி அல்லவா! ஆகவே எப்போதும் ஏதேனும் திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். சில வேளைகளில் இலட்சக்கணக்கான மக்கள் கூடுவர். பல வேளைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வருவர். அனைவரும் சைவ வைணவ சமயத்தவர்களே. அவர் களுக்கு இடையில் இந்த மக்ளின் தம்பதிகள் தம் சமயப் பிரசாரத்தைச் செய்வர்; துண்டுப் பிரசுரங்கள் வழங்குவர்; விவிலிய நூல்களைத் தருவர். எளிய முறையில் நடுத்தெருவில் நின்று அவர்கள் சமயப் பணியைச் செய்துகொண்டிருப்பர். அவர்தம் பொறு மைக்கு எல்லைகாண முயன்ற சில நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. ஆயினும் அவர்கள் உளம் கலங்காது "கர்த்தர்’ தொண்டினைச் செம்மையாகச் செய்துவந்தனர். சிலமுறை