பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 ஆனந்த முதல் ஆனந்த வரை அறிஞர் கா. சுப்பிரமணிப்பிள்ளை அவர்களை நாடு அறியும். அவர்தம் புலமையை உலகு அறியும். இருந்தும் கடைசிக்காலத்தில் அவர் வாழ்க்கை செம்மையாக அமைய வில்லை. அவரை ஆதரிப்பார் அற்ற நிலையில் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். என் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந் தார். அப்போது நான் அவரிடம் பல பாடங்களைக் கேட்டு அறிந்து கொண்டேன். ஆயினும் அவரால் முழுப் பயன் பெற்றவர் திரு. வச்சிரவேலு முதலியார் அவர்களாவர். எப்படியோ அவரைத் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவரிடம் சமய நூல்கள்-சாத்திர நூல்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டார். இன்று அவர்கள் சமய சாத்திர விற்பன ராக இருப்பதற்கு அதுவே அடிப்படைக் காரணம் என்றால் மிகையாகாது. ஒரு முறை திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் அவர்கள் காஞ்சிபுரம் வந்து தங்கி. பல நாட்கள் சமய, சாத்திரச் சொற்பொழிவுகள் செய்தனர். அவர்தம் ஆழ்ந்த புலமையும் சமயத்தில் தளரா நம்பிக்கையும் நாடறிந்தவை. மிக உயர்ந்த சைவ சித்தாந்தக் கருத்துக்களையும் இளங் குழந்தைகளும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கிச் சொல்லும் திறனை அவரன்றி வேறு யாரால் பெற முடியும்? பல நாட்கள் அவருடைய சொற்பொழிவைக் கேட்ட நான் தெளிந்த சமய உணர்வினைப் பெற்றேன். அவர்தம் சொற் பொழிவுத்தொடர் சென்னை செயிட்காலனி'யில் நடை பெற்ற போதும் நான் சில நாட்கள் பயன் பெற்றேன். பேச்சாற்றல் பெற்றதோடு இறைவனிடத்தில் தளரா நம்பிக் கையும் மன உறுதிப்பாடும் கொண்டு அடிகளார் வாழ்ந்து வந்தார். அவர்தம் நம்பிக்கையும் உறுதிப்பாடுமே அவர்தம் இறுதி நாளினை இனிமையாக அமைத்தன. பழநியில் பங்குனி விழாவில் முருகனை வழிபட்டுத் திரும்பிய அடிகளாரின் நல்லுயிர் பல்லக்கில் முடிய, அடுத்த ஊரில் சென்று திறப்