பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 277 மாகக் கருத்திருத்தாமையின் ஊர் வளம் குன்றத் தொடங்கி விட்டது. ஒரு காலத்தில் எல்லா வகையிலும் சிறந்திருந்த எங்கள் ஊர், எல்லாவற்றிலும் நிலைகுலையத் தொடங்கிய தன்மையை நினைத்து வருந்தினேன். சில சமயங்களில் ஊரில் உள்ள பெரியவர்களை யெல்லாம் ஒன்று சேர்த்து எப்படியும் ஊரை வளம்பெறச் செய்ய முயல்வேன். பல சமயக் கூட்டங்களுக்கும் கோயில் விழாக்களுக்கும் ஏற்பாடு செய்வேன். என்றாலும் அவற்றாலெல்லாம் பயன் விளையக் காணவில்லை. அடுத்த நெய்க்குப்பம் கிராமத்திலும் எனக்கு நிலபுலன்கள் இருந்தமையின் அதையும் வளமாக்க முயன்றேன். அதற்குள் நெல் விலை உயர உயர மக்களிடம் பயிரிட ஆர்வம் பெருகுமென எதிர்ப்பார்த்தேன். நெய்க்குப் பத்தில் அந்த ஆர்வம் ஒருவாறு இருந்தது என்றாலும் அங்கம்பாக்கதில் அவ்வளவாக இல்லை. இருப்பினும் எப்படி யாயினும் தாழ்ந்த கிராமங்களை தலைநிமிர்த்த முயன்றேன்; முடியவில்லை. ‘. இடையில் மற்றொரு ஏற்பாடும் நடைபெற்றது. எங்களுர் பாலாற்றின் தென்கரையில் உள்ளது. அடுத்த வடகரையில் சாலையும் இரெயில் பாதையும் உண்டு; அதை அடுத்துச் சுமார் 20 ஏக்கர் நிலம் இருந்தது. அதில் பாதி சமுதாய நிலம்; பாதி அரசாங்கத்துடையது. அவற்றைப் பெற்றால் அங்கே மறைந்த என் அன்னையின் பேரால் ஏதாவது கைத்தொழிற் பேட்டையோ கல்விச் சாலையோ அமைக்கலாம் என எண்ணினேன். என் முயற்சி ஒரளவு வெற்றியும் தந்தது. முக்கியமாக உள்ள சில அன்பர்கள் தாமே முன்வந்து, குறித்த ஒரு சிறு விலைக்குத் தத்தம் சமுதாய நிலத்தை எனக்கு எழுதித் தந்துவிட்டனர். மற்றவை வாங்கிய பிறகு அரசாங்க நிலத்தையும் பெற்றுத் தொடர்ந்து செம்மைப்பணி ஆற்றத் திட்டமிட்டேன். எனினும் அந்தப் பணி இன்னும் தொடங்கப் பெறவில்லை. என் ஆயுட் காலத்துக்குள் அப்பணியைத் தொடங்கி நடத்