பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 ஆனந்த முதல் ஆனந்த வரை துவேன் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து வருகின்றேன். அதற் கிடையில் தற்போது சென்னையிலும் இங்கே ஏர்க்காட்டிலும் வேறு வகையான பணிகளை என் சொந்த முயற்சியில் தொடங்கத் திட்டமிட்டுச் செயலாற்றவும் தொடங்கி யுள்ளேன். இந்நிலையில் அந்தப் பாலாற்றங்கரைப் பணி எப்போது தொடங்கப் பெறுமோ அறியேன். மகன் பிறந்த மகிழ்ச்சியில் எங்களுர்க் கோயில் விழா வாற்றியது மட்டுமின்றி எங்கள் குலதெய்வமாகிய ஆட்டுப் புத்துர் அம்மனுக்கும் விழா எடுத்தோம். எந்தச் சிறப்பு நடந்தாலும் அத்தெய்வத்தை வழிபடாது நாங்கள் செய லாற்றுவதில்லை. கடைசியாக என் மகனின் மணத்தின் போதும் அத்தெய்வத்திற்கும் வழிபாடாற்றினேன். நான் அங்கம்பாக்கமாயினும் எங்கள் வீட்டை ஆட்டுப்புத்துரார் வீடு என்றே அழைப்பர். ஒருவேளை எங்கள் முன்னோரில் யாராவது அவ்வூரிலிருந்து இங்கே வந்திருப்பார்கள் என எண்ணினேன். அங்கேயும் எங்கள் உறவினர் இருப்பதால் சில காலங்களில் செல்வதுண்டு. பொதுவாக இவ்வாறு பலவகையில் சமயநெறியிலும் தெய்வப்பணியிலும் காலங்கழித்து வந்த நான் மேலே படிப்பதைப் பற்றியும் சிந்தித்து வந்தேன். எப்படியும் அந்த ஆண்டில் பி. ஒ. எல். தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்று முயன்றேன். பள்ளியில் விடுமுறை பெற்றுப் பயின்று வந்தேன். மினர்வா பரசுராமன் அவர்கள் எனக்குப் பெரிதும் உதவினர். எல்லாருடைய வாழ்த்தின் வலத் தாலும், நம்பிக்கையின் உறுதியாலும் ஆழ்ந்து பயின்ற வகையாலும் நான் எழுதிய பி.ஓ.எல். தேர்வில் சிறக்க வெற்றி பெற்றேன். அதே வேளையில் காஞ்சியின் சூழலும் என் பட்டமும் என்னை மேலிடத்திற்கு-சென்னையில் ஏதேனும் ஒரு கல்லூரியில் பணிசெய்யும் நிலைக்குப் போகுமாறு அமைந்து வழிகாட்டின. இறையருள் நம்பிக்கை யில் அதன்வழி சென்றேன்.