பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 281 காஞ்சிபுரத்தில் பணி ஏற்றமை அறிந்த ஒன்றே. பின்பு அந்தப் பணிக்கு முற்றுப்புள்ளி நேர்ந்தபொழுது மறுபடியும் ஏர்ப்பின் சுழல வாய்ப்பு உண்டு என எண்ணினேன். அப்போது சாதகங்களை நினைவூட்ட என் அன்னை யாரும் இல்லை. எனக்கும் சாதகங்களில் நம்பிக்கை இல்லை. சாதகக் கணிப்பில் தவறு உண்டென்றோ சாதகமே பொய்யானது என்றோ நான் கொள்வதில்லை. ஆயினும் அதுபற்றி அறிந்து எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதும் யாவும் இறைவன் திருவுளப் படியே நடக்கும் என்பதும் என் உள்ளக் கிடக்கை. எனவே தான் சாதகங்களை நான் நாடுவதில்லை. அதனாலேயே பின்னர் என் பிள்ளைகளுக்கு உரிய சாதகங்களை நான் எழுதி வைக்கவில்லை. எனினும் என்னைப் பொறுத்தவரையில் அன்றுமட்டுமன்று இன்றுவரையிலும் அந்தக் கல்லா நல்ல வள்ளுவரின் சாதகப்படியே யாவும் நடை பெறுகின்றதை எண்ணி எண்ணி வியப்படை கின்றேன். அந்த அடிப்படைலேயே நான் நினைத்த பயிர்த் தொழிலில் என்னை இணைக்காத சூழல் உருவாகி வந்தது. திருக்கோயில்களின் நிருவாகப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளும்பணி என்னைக் காஞ்சியில் நாடிவந்தபோது அதை நான் வேண்டாம் என ஒதுக்கினேன். இந்து அற நிலை யத்தில் திரு. T.M. நாராயணசாமிப் பிள்ளையும், திரு. C. M. இராமச்சந்திரன் செட்டியாரும் பணியாற்றிய காலத்தில் என்னை வலிய அழைத்து, காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலயத்தின் அறங்காவலனாக இருக்கவேண்டும் என வற்புறுத்தினர். நான் சென்னை செனறு நேரில் அவர்களைக் கண்டு பணிந்து, எனக்கு அப்பணியினைத் தரவேண்டா மென்று வேண்டி விடுதலை பெற்றுக் கொண்டேன். இந்த நிலையில் என் மைத்துனர் உக்கல் வடிவேலு முதலியார் அவர்கள் இளையனார் வேலூர் பாலசுப்பிரமணியர் தருக்