பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சி வாழ்க்கை 283 என்று அவர்கள் என் வருகையை விரும்பாததாலும் நான் அதை ஏற்க மறுத்துவிட்டேன். எனினும் அப்பா அவர்கள் எல்லாரிடமும் நான் அப்பள்ளியில் சேருவதற்காகவும் அங்கே ஒரு தமிழ்க்கல்லூரி தொடங்குவதற்காகவுமே காஞ்சிபுரப் பணியைக் கைவிட்டேன் என்று கூறிவந்தனர். ஆயினும் என் சூழல் என்னைச் சென்னைக்கு ஈர்த்தது. வாலாஜாபாத் இந்துமத பாடசாலைக்கும் எனக்கும். நான் பயின்ற அந்த நாளில் இருந்து (2925) இன்றுவரை தொடர்பு இருந்துகொண்டே இருக்கிறது. ஏதோ படித்தோம் விட்டோம் என்று இல்லாமல், நான் அப்பள்ளியில் ஒர் அங்க மெனப் பலரும் எண்ணத் தக்க வகையில் நான் அப் பள்ளியொடு தொடர்பு கொண்டிருந்தேன். இடையில் ஓராண்டு அப்பள்ளியில் பணியாற்றியதையும் அப்போது நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் இந்த நூலில் முன்னரே குறித்துள் ளேன். அதற்குப் பிறகும் என் தொடர்பு பள்ளியில் பிணைந்தே இருந்தது. அப்பா அவர்கள் பள்ளிக்குப் பார்வையிட யாரை அழைத்து வந்தாலும் (அவர்கள் பெரும்பாலும் சென்னையி லிருந்து வருபவராதலால்) என்னையும் அவர்களோடு ஏதாவ தொரு காரில் வரச் சொல்லுவார்கள். வேறு பிறவிடத்தி லிருந்து வந்தாலும் எப்படியும் என்னை அழைத்துச் சென்று விடுவார்கள். பின் நான் புதுப்பட்டங்கள் பெற்றபோதும் பதவி உயர்வுகள் பெற்றபோதும் அவர்கள் என்னைப் பாராட்டத் தவறவில்லை. மேலும் பள்ளியின் பழைய மாணவர் மன்றம் அமைத்து, அதன் தலைவராக என்னை அமைத்து வாழ்த்தினார்கள். நான் ஐதாராபாத் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவனாகச் சென்றபோது (1966) என்னை வாழ்த்தி அனுப்பினார்கள். ஆனால் நான் 1907இல் திரும்பிவந்தபோது அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில்