பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 ஆனந்த முதல் ஆனந்த வரை இருந்தார்கள். அவர்தம் கடைசிக் காலம்வரையில் அவர்கள் என்னைத் 'தம்பி', 'தம்பி என அழைத்துப் போற்றிய தன் மையினை என்னால் மறக்க முடியாது. இடையில் மறைந்த என் அன்னைக்கு நிலைத்த நினைவாக ஏதேனும் கல்வி, கைத்தொழில் பற்றிய நிலையம் ஒன்று தொடங்க வேண்டுமென்ற எண்ணம், அன்னையர் மறைந்த நாளிலிருந்து என் உள்ளத்தில் ஊசலாடிக் கொண் டிருந்தது. அதற்கென. முன் காட்டியபடி புளியம்பாக்கத்தில் இரெயிலுக்கும் கற்பாதைக்கும் அடுத்து, பாலாற்றங்கரை யினுள் சமுதாய நிலத்தை வாங்க முயன்றேன். பலர் முன் வந்து குறைந்த விலையில் சுமார் நான்கு ஏக்கர் நிலத்தைக் கொடுத்தனர். இன்னும் மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. அதையும் வாங்கி, பக்கத்திலுள்ள அரசாங்கத்துக்குரிய எட்டு ஏக்கர் நிலத்தையும் கேட்டு வாங்கி, பதினைந்து ஏக்கரில் வள்ளியூர் என்ற ஊர் அமைத்து ஒரு கல்வி நிலையமும் தொழில் நிலையமும் அமைக்கத் திட்டமிட்டேன். பலர் வாலாஜாபாத்தில் மேற்கே மாசிலாமணி முதலியார் கிழக்கே நான்-ஆக இருவரும் கல்விப்பணி ஆற்றுவது ஊருக்கே நல்லது என்றனர். இந்த நிலையிலும் இதற்கு மருந்தாக அப்பா அவர்கள் இந்த யோசனையைக் கைவிடல் வேண்டி, அவர் பள்ளியில் சில பொறுப்புக்களை ஏற்க அழைத்திருக்கலாம். எப்படியோ, அப்பணி இன்றும் அந்த அளவிலேயே உள்ளது. என்றாவது ஒருநாள் அப்பணி நிறைவேறும் என்ற உளத் தோடு உள்ளேன். எனினும் இதற்கிடையில் என் அன்னை யின் பெயரால் சென்னை அண்ணாநகரில் அமைத்துள்ள கல்விக்கூடம் (1968-இல் தொடங்கப்பெற்றது) நன்கு வளர்ந்து என் அன்னையின் பெயரை என்றும் வாழவைக்கும் நிலையில் ஆக்கம்பெற்று வருவதை எண்ணி மகிழ்கின்றேன். என்னுடைய வாழ்வின் திருப்பங்கள் நேரும்போது நான் இறைவனையே துணையாகக் கொள்ளுவது மரபு. காஞ்சி