பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 ஆனந்த முதல் ஆனந்த வரை படிக்கலாம் அல்லது எழுதலாம் என்று எண்ணிய நேரங்கள் உள. எனினும் நான் ஒய்வு பெறுவதன் முன்பே என் அன்னையின் நினைவாக வள்ளியம்மாள் கல்வி அறத்' தினைத் தொடங்கினேன். 1968இல் 5 பிள்ளைகளுடனும் முன்று ஆசிரியர்களுடனும் தொடங்கிய பள்ளி தற்போது 1600 பிள்ளைகளையும் 65 ஆசிரியர்களையும் கொண்டு வளர்ந்துள்ளது. பள்ளி முதல்வரின் தளரா முயற்சியாலும் ஆசிரியர்தம் உழைப்பினாலும் பெற்றோர்தம் ஒத்துழைப் பாலும் இப்பள்ளி இக் குறுகிய காலத்தில் நன்கு வளர்ந்த தோடு நல்ல தரத்தினையும் நிலைநாட்டியுள்ளது. நான் அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இந்தப் பள்ளிப் பணியில் என்னை மூழ்குவித்துக் கொண்ட காரணத்தாலே என்படிப்பும் எழுத்தும் பெரும் அளவு குறைந்துவிட்டன எனலாம். இன்றியமையாத ஆய்வுக் கட்டுரைகள்-சொற்பொழிவுகள் அடிப்படை பற்றி எழுதிய எழுத்துக்கள் தவிர்த்து மற்றவற்றை நான் நினைக்கவே முடியவில்லை. என் பழைய எழுத்துக்களை ஒருநாள் துருவி ஆராய்ந்த போதுதான் இந்த எழுத்துப் பிரதியும், தென்னாட்டுக் கோயில்கள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய (250 பக்கம்) மற்றொரு எழுத்துப்பிரதியும் கிடைத் தன. உடனே இதை வெளியிடவேண்டுமென நினைத்து ஆவன மேற்கொண்டேன். (ஆங்கில நூலாகிய மற்றொன் றையும் விரைவில் வெளியிட ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டு வருகிறது.) என், எம்.லிட். பட்டத்துக்கு எழுதப் பெற்ற (32 ஆண்டுகளுக்குமுன்) தேவாரம் பற்றிய ஆங்கில ஆய்வுக் கட்டுரையும் இன்னும் வெளியிடப் பெறாமலேயே உள்ளது. இந்த நூலில் ஒரு சிலரையும் கொள்கைகளையும் சற்று வன்மையாகக் காட்டியுள்ளதாக நினைக்கிறேன். இன்று எழுது வேனாயின் இந்த அளவு வேகம் இருக்காது. ஆயினும்