பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சென்னை வாழ்வின் தொடக்கம் கற்றார் வாழ் காஞ்சியில் எட்டு ஆண்டுகள் கழித்தபின், எப்படி நான் சென்னைக்கு வந்து சேர்ந்தேன் என்பதையும் பச்சையப்பரில் எவ்வாறு பணி ஏற்றேன் என்பதையும் ஒரளவு சுருக்கமாகச் சென்ற பகுதியில் காட்டியுள்ளேன். என் வாழ் நாளில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, என் அறுபத்திரண்டு வயதுவரை என்னை அரவணைத்து ஆதரித்த பச்சை யப்பரில் வாழ்ந்த வாழ்க்கையினை ஒரளவு எண்ணிப் பார்க்க நினைக்கிறேன். முன்பெலாம் உள்ளமை போன்று அல்லாமல் என் வாழ்வு விரிந்து பரந்த சென்னையில் பலருடன், பல நாட்டினருடன் கலந்து அமைந்ததை எண்ணிப் பார்க் கின்றேன். படக்காட்சி போன்று ஒன்றன் பின் ஒன்றாக நிழலிடுகின்றன. முறையாக இன்றேனும் எண்ண நெறி நின்று முப்பது ஆண்டுகளுக்கு மேலான என் வாழ்வின் நிகழ்ச்சிகளை ஒரளவு எண்ணிக் குறிக்கலாம் என மேலே செல்லுகின்றேன். என் முப்பதாவது வயதில் சென்னை வந்து சேர்ந்த நான், பச்சைப்பரில் 30 ஆண்டுகளுக்கு மேலாகப்பணியாற்றியதோடு, நிலைத்து இங்கே தங்கி என் வாழ்வையும் என் மக்கள் வாழ் வையும் அமைத்துக் கொண்ட நிலையினை எண்ணுகிறேன்; எண்ணம் தொடர்கிறது. காஞ்சியினை நான் விட்டு வந்ததற்குக் காரணத்தைத் தெளிவாக முன் குறிப்பிடவில்லை நான் வித்துவான் தேர்வு முடித்ததும் நான் பயின்ற செங்கற்பட்டு செயிண்டு கொலம் பாஸ் பள்ளித் தலைவரும் காஞ்சி ஆந்திரசன் உயர்நிலைப் புள்ளித் தலைவரும் போட்டியிட்டு, தத்தம் பள்ளிக்கு நான் வர வேண்டும் என முயன்றதை முன் குறிப்பிட்டுள்ளேன். அப்போது காஞ்சி, செங்கற்பட்டு, அரக்கோணம் என்ற மூன்று ஊர்களிலும் உள்ள பள்ளிகள் ஒரே திருச்சபையின் கீழ் இயங்கி வந்தமையின் ஆசிரியர் நியமனங்கள் அனைத்தும் அவர்தம் கூட்டுச்சபையிலேயே முடிவு செய்யப்பெறும்.