பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 295 பெற்றவராயினும் பட்டம் பெற்றுத் தகுதி பெறவில்லை. எனினும் அவர் நியமனம் செய்யப் பெற்றார். தகுதியின்மை யாலும் ஆந்திரசன் பள்ளியில் பல ஆண்டுகள் நான் பணி யாற்றியமையாலும் அவர் புதியதாக வந்தமையாலும் அவருக்குக் கீழ் வகுப்புகள் தரப்பெற்றன. நான் மேல்வகுப்பு களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறிய போதிலும் பாடசாலைக் கண்காணிப்பாளர்கள் அதற்குச் சட்டம் இடம் தராது என்று கூறியமையின் கீழ் வகுப்புகளே அவர் எடுத்தார். என்றாலும் தன்னிடம் பயின்ற மாணவன்-சிறுவன் தனக்கு மேலாக (Senior) தான் கீழாக (Junior) இருப்பதா என்ற எண்ணம் அவர் உள்னத்தில் எப்படியோ தோன்றிற்று. எப்படிப்பட்ட நல்லவர் இப்படி மாறிவிட்டாரே என நினைத்தேன். அவர் காஞ்சிபுரத்தில் சொந்த வீட்டிலேயே இருந்தமையின், சென்று அன்னையாரைக் கண்டு ஒரளவு குறையினைக் கூறினேன். அவர்கள் வருந்தினார்கள்; எனினும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. தலைமை ஆசிரியர் அவர்களும் இவரும் என்னை எப்படி யாவது பள்ளியிலிருந்து வலிது விலக்க முயன்றனர். அவர்கள் எண்ணம் தீயதாயினும் எனக்கு நன்மையாகவே முடிந்தது. அவர் தம் செயலே என்னை மேலே படிக்கத் தூண்டி *பி.ஒ எல்’ பட்டம் பெற வழிகாட்டிற்று. எனவே அவர் களைப் போற்றி வழிபட்டேன். இடையிடையே நீண்ட விடுமுறைகள் பெற்று இரண்டாண்டுகளில் பட்டப்படிப் பினைத் தனியாக முடித்தேன். அதற்கு இடையில் பள்ளியில் ஆண்டுதோறும் நடைபெறும் அரசாங்கச் சோதனையில் மாவட்டக் கல்வி அதிகாரியும் வட்டக்கல்வி அதிகாரியும் பள்ளிக்கு வந்தனர். பெரும்பாலும் மாவட்டக் கல்வி அதிகாரி தமிழ் வகுப்பிற்குப் பார்வையிட வரமாட்டார்; அது அவர்தம் பதவிக்கு கெளரவம் தராத ஒன்று என எண்ணி