பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296. ஆனந்த முதல் ஆனந்தவரை இருப்பார். எல்லாக் கல்வி அதிகாரிகள் நிலையும் அப்படித் தான். எனவே வட்டக் கல்வி அதிகாரியே(Deputy Inspector of Schools) பள்ளி இறுதி வகுப்பு வரையில் தமிழ் வகுப்பு களைப் பார்வையிடுவார். அப்படியே என் வகுப்பினைப் பார்த்த வட்டக் கல்வி அதிகாரி, மேலதிகாரியுடன் சேர்ந்து என்னைப்பற்றி என்ன குறை எழுதலாம் என ஆலோசித்தனர் போலும். ஒன்றும் தெரியவில்லை. எனவே இவர் வகுப்பின் தரத்துக்கு உயர்நிலையில்-உயர்ந்த நடையில் பாடம் நடத்துகிறார் எனக் குறித்தனர். அதாவது நான் பள்ளி வகுப்பிற்குப் பாடம் நடத்தத் தகுதி அற்றவன் (கல்லூரியில் வேண்டுமாயின் பணியாற்றலாம்) என்ற குறிப்புடன் அவர்கள் எழுதினர் போலும், அவர்தம் வாழ்த்தும் பலிக்க, நான் அடுத்த ஆண்டே பச்சையப்பர் கல்லூரியில் பணி ஏற்றேன். எனினும் அதற்கு முன்பே வாலாஜாபாத்திலோ அதன் சுற்றுப்புறத்திலோ அன்னையின் பெயரால் கல்விப்பணி தொடங்க முயன்றதையெல்லாம் முன்னரே குறிப்பிட் டுள்ளேன். 1944 சூன் 27ஆம் தேதி சென்னைப் பச்சையப்பர் கல்லூரியில் விரியுரையாளனாகப் பணி ஏற்றேன். அதே சென்னையில் இன்று அரசியலில் ஆழ்ந்துள்ள அன்பழகன் அவர்களும் சேர, அங்கேயே இருந்த ஞானசம்பந்தம் அவர் களும் விரியுரையாளராக உயர்த்தப் பெற்றார். புலவர் அன்பு கணபதி அவர்களும் சேர்ந்தன்ர். எங்களை அன்று கல்லூரி முதல்வர் டாக்டர் B. V. நாராயணசாமி நாயுடு அவர்களும் துறை முதல்வர் மோசூர் கந்தசாமி முதலியார் அவர்களும் அத்துறையில் இருந்த டாக்டர் மு. வரதராசனாரும் மற்றவர் களும் அன்புடன் வரவேற்றனர். என் சென்னை வாழ்வும் தொடங்கியது. சென்னையில் அக்காலத்தும் (1944) வாடகைக்கு வீடு கிடைப்பது கடினமே. இன்று காணும் பல புறநகர்ப் பகுதி