பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 ஆனந்த முதல் ஆனந்த வரை இடம் புதியதாயினும், அனைவரும் நன்கு பழகியமை யால் எனக்கு எந்த மாறுபாடும் தோன்றவில்லை. இடைநிலை வகுப்பு, பட்ட வகுப்பு, பட்ட மேல்வகுப்பு ஆகியவை எடுக்க வேண்டிவந்தது. பாடங்களை முன்பாக நன்கு கண்டு தெளிந்தே வகுப்பிற்குச் செல்வேனாதலால் மாணவர்தம் நன் மதிப்பையும் பெற்றேன். எங்கள் எதிர் வீட்டில் இருந்த பாஷ்ய ராமாநுஜம், டாக்டர். மு.வ. ஆகியோர் தம் குடும்பங் களும் எங்கள் குடும்பமும் ஒன்றாகக் கலந்து பழகி, ஒரே குடும்பம் என்னுமாறு வாழ்ந்துவந்தோம். சென்னையில் இருந்தமையின் அடிக்கடி திரு. வி. க., இரா. பி. சேதுப்பிள்ளை ஆகியோரையும் பிறரையும் அடிக் கடி காணும் வாயப்பு கிட்டியது. சேதுப்பிள்ளை பல்கலைக் கழகத்தில் பணியாற்றிவந்தார். எனவே என்னை எம்.லிட்., ஆய்வுப்பட்டத்துக்குப் (M.Litt.) பதிவு செய்து கொள்ளச் சொன்னார். பொருளும் தந்தார். தேவாரத்தில் வரலாற்று -gūai' (Historical Studies of Thevaram Hymns) argårug பொருள். 1945இல் பதிவு செய்து 1947இல் பட்டமும் பெற்றேன். டாக்டர். மு.வ. அவர்களே என்னுடைய மேற் பார்வையாளராக இருந்தார்கள். அப்போது பி.ஓ.எல். (B.O L.) பட்டம் பெற்றவர்கள் எம்.ஓ.எல். (M.0 L.) ஆய்வுப் பட்டத்துக்குத்தான் பதிவு செய்யலாம் என விதி இருந்தது. சேதுப் பிள்ளை அவர்கள் அதை மாற்ற முயன்று, பி ஓ.எல், (B.O.L.) பெற்ற என்னை முதன்முதலாக எம்.லிட்." (M.Litt.) பட்டத்திற்குப் பதிவு செய்யச்சொல்லிப் பட்டம் பெறவும் வழி காட்டினார்கள். பிறகு சேதுப்பிள்ளை அவர்கள் என்னை டாக்டர் பட்டத்துக்குப் பதிவு செய்துகொள்ளப் பணித் தார்கள். ஆயினும் அதற்கெனப் பலகுறிப்புகள் எடுத்தபிறகு ஓராண்டு கழித்து அவர்களே வேண்டாம் என்றார்கள், "வருங்காலத்தில் யார் யாரோ எப்படி எப்படியோ இந்த டாக்டர் பட்டம் பெற்றுவிடுவார்கள். அந்தக் கூட்டத்தில்