பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்யரில் 301 தமிழ்ப் பிரிவு. அதிலும் மாணவர் குறைவே. அக்காலத்தில் (1944) பச்சையப்பரில் தவிர்த்து வேறு எங்கும் தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்பு இல்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் இங்கும்தான் இருந்தன. எனவே அக்காலத்தில் தமிழைப் பயின்றவருள் பெரும்பாலோர் இவ்விருவிடங்களிலுமிருந்து வந்தவரே. மாணவர்களை வெறும் படிப்பில் மட்டுமின்றி, பேச்சு, நடிப்பு ஆகியவற்றிலும் சிறந்தவராக்க நாங்கள் முயன்றோம். தமிழ்மன்றம் சிறக்கச் செயலாற்றிற்று. அக்காலத்திய பேரறிஞர்கள்-திரு.வி. க., இரா.பி. சேதுப்பிள்ளை போன்றவர் கள், பெரியார், அண்ணா போன்றவர்கள் அடிக்கடி வந்து பேசி மாணவர்களை ஊக்குவித்தனர். பல கல்லூரிகளுக்கு இடையே பேச்சுப் போட்டி முதலிய நடைபெறும். சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய எல்லாக் கல்லூரி களுக்கும் இயைந்த பேச்சுப் போட்டியின் கடைசிச் சுற்றும் இங்கே நடைபெறும். அப்படியே சில ஆண்டுகளுக்குப் பின்னர் பல கல்லூரிகளுக்கிடையே ஓரங்க நாடகப் போட்டியினை நடத்தினோம். அதற்காகவும் பேச்சுப் போட்டிக்காகவும் சுழற் கேடயங்களும் தனிப்பரிசுகளும் அமைத்தோம். பெரிய சுழற் கோப்பைகளை மாண்புமிகு ‘எம்.ஜி.ஆர் போன்றவர்கள் வழங்கினார்கள். அவர்களும், கலைஞர் போன்றவர்களும் கல்லூரி மன்றங்களுக்கு வந்துள்ளனர். பேராசிரியர் அன்பழகன் அப்போது பணி யாற்றியமையின் அன்றைய திராவிட கழகப் பேச்சாளர்களும், அவ்வாறே கல்லூரி மன்றத்தில் இராஜாஜி போன்ற அரசியல் தலைவர்களும் வந்து கலந்து கொள்வர். இக்கல்லூரி மாணவர் பிற கல்லூரிகள், மன்றங்கள் நடத்தும் பேச்சுப் போட்டி எழுத்துப் போட்டியில் கலந்து கொண்டு, தமிழில் நன்கு சிறந்து பலப்பல பரிசுகளைப் பெற்று வந்துள்ளனர். அக்காலத்தில் பச்சையப்பன் கல்லூரிப் படிக்கட்டும்