பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 303 இடையேதான் நான் நாட்டு ஒருமைப்பாட்டு மாநாட்டிற்குச் செல்ல விடுமுறைகேட்டபோது, அதைப் பணி மேற்செல்லும் வேலையாகவே கொண்டு வாழ்த்தி வழி அனுப்பினார். அவருக்குப்பின் திரு. சங்கரநாராயணபிள்ளை என்பவர் முதல்வராக வந்தார். அப்போது அவர் விடுதிக் காப்பாள ராக இருந்து அதிலிருந்து விலகி எங்கள் வீட்டிலேயே (5ւգயிருந்தார். என்னை விடுதிக் காப்பாளராக இருக்க வற்புறுத்தினார். என்னை வற்புறுத்தி, ஆணையிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். நான் வேலையை விட்டு விலகி விடுவதாகவே எழுதி விடுவேன் என்றேன். எனவே என்னை வற்புறுத்தவில்லை. பின் 1965இல் என்னைத் துணை முதல்வராக நியமிக்கப் பச்சையப்பர் ஆட்சிக்குழு முடிவு செய்தது. அப்போது நான் ஏர்க்காட்டில் இருந்தேன். தகவல் அறிந்தவுடன் சென்னைக்கு வந்து அப்போது தலைவராக இருந்த கச்சாபகேச முதலியார் அவர்களிடமும் பிறரிடமும் சொல்லி, என்னை அமைதியாக இருக்க விடுமாறும் ஆட்சி, அதிகாரப் பொறுப்பு என் எழுத்துப் பணிக்கும் பிற தொண்டுகளுக்கும் இடையூறுகளாக அமையும் என்றும் கூறினேன். அவர்களும் உணர்ந்து திரு. சண்முகநாதன் அவர்களைத் துணை முதல்வர் ஆக்கினார் கள். பின் அவர்களே முதல்வராக வந்து தொடர்ந்து பல ஆண்டுகள் பணிபுரிந்தனர். நான் அவர் கீழே தமிழ்த்துறைத் தலைவனாகப் பணியாற்றினேன்; பின் அண்ணா முதல் வரானபின் அவர் கூறியபடி,சொல்லைத் தட்டாமல் துணை முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றேன். நான் ஒய்வு பெற்ற பிறகும் திரு. சண்முகநாதன் பல ஆண்டுகள் பணி யாற்றினார். . இதற்கு இடையில்தான் 1947இல் வாலாஜாபாத்தில் உயர்நிலைப்பள்ளிக்குழு அமைத்து, அதன் செயலாளராக இருந்து உயர்நிலைப்பள்ளியினைத் தொடங்கினேன்.