பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 305. அறநிலையத்தாரிடம் நான் ஒன்றை வற்புறுத்தினேன். நம் கல்லூரியில் பயின்ற சிறந்தவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அது. அப்படியே புதிதாகத் தொடங்கிய கல்லூரிகளுக்கும் தமிழ்த்துறைக்கு நம் மாணவர்களையே இடம் பெறுமாறு முயல்வேன். சில காரணங்கள் அடிப்படை யில் ஒருசில இடங்கள் தவிர்த்து நம் மாணவர்களே இன்றள வும் இடம் பெற்றுள்ளனர். நான் ஒய்வு பெறும் போது பச்சையப்பர் தமிழ்த்துறையில் பத்தொன்பதுபேர் இருந்தனர் (நான் வந்தபோது ஒன்பதுபேர்). அப்பத்தொன்பது பேரில் இருவர். தவிர மற்றவர் பச்சையப்பரில் பயின்றவர்களே. (ஒருவர் நான் மதுரையில் இருந்தபோது என்னிடம் பயின்ற வர்) அந்த இருவரும் எந்த வழியாகவோ இடம் பெற்றனர். அவர்களையும் நான் மறுக்காது ஏற்று உரியவகையில் மதிப்புக் கொடுத்து வந்தேன். ஒருவர் என்னிடம் மாறிய நிலையிலும் அவரையும் ஒதுக்காது அரவணைத்தே சென்றேன். அப்படியே மாணவர்களைப் பட்டவகுப்பிற்கோ முதுநிலைவகுப்பிற்கோ சேர்க்கும் போதும் தமிழ் பயின்றவர்களையே சேர்க்க முடிவு செய்து, அதன்படியே செயலாற்றினேன். அதனால் மாறு பட்டவர்களும் இருந்தனர். 1944 முதல் 1976 வரை (இடையில் ஒராண்டு தெற்கேயும் ஓராண்டு வடக்கேயும் சென்றதுபோக) முப்பது ஆண்டுகள் தொடர்ந்து அன்றைய என்வயதில் பாதியை அங்கே சுழித்தேன். எனக்கு அறுபது வயது நெருங்கிய காலத்தில் எனக்கு மணிவிழா எடுக்க மாணவர் நினைத்தனர். நான் மறுத்து விட்டேன். டாக்டர் மு.வ. அவர்களும் (எனக்கு இரண்டு ஆண்டு மூத்தவர்) கொண்டாடவில்லை. எனவே பழைய மாணவர் சங்கம் கண்டு, அதன் வழியே இரண்டாண்டுகள் இருநாட்கள், கருத்தரங்குகள்-எங்கள் செயல்பற்றியே-நடத்தி மகிழ்வு கண்டனர். ஆ-20