பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 307 வரும் அ.தி.மு.கவில் உள்ள மாண்புமிகு K. A. கிருஷ்ணசாமி, பட்டாபிராமன், தேவராசன் போன்றவர்களும் எம் மாணவர்களே. இவ்வாறு எல்லாக் கட்சிகளிலும் எங்கள் மாணவர்கள் உள்ளமையின் யார் ஆளவந்தாலும் எங்கள் கல்லூரிக்கும் சிறப்பாக எனக்கும் எப்போதும் நன்மையே கிடைக்கும் என்பது துணிபு. கல்லூரி மாணவர்களில் பச்சையப்பர் கல்லூரி மாணவர்களிடத்தில், பிறரிடம் இல்லாத, தாம் பயின்ற கல்லூரியின்பாலும், ஆசிரியர்கள் பாலும் பற்றும் பாசமும் அதிகம் என்பது நாடறிந்த உண்மை. இப்போது தமிழ் நாட்டில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் பெரும்பாலும் (ஏன்?-எல்லாவற்றி லும்) பச்சையப்பர் மாணவர் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். கோட்டைக்கு ஏதேனும் செயல் வேண்டிச் சென்றால், அங்கே பச்சையப்பர் மாணவர் தாமே முன்வந்து ‘நான் பச்சையப்பர் மாணவர்; இன்ன துறையில் படித்தேன் இன்ன ஆண்டில் படித்தேன்' என்று கூறி, எனக்கு என்ன வேண்டுமென்று கேட்டு, வந்து உதவுவார்கள். இப்படியே எங்கும் மாணவர் தம் பண்பினையும் பாசத்தினையும் காண முடியும். பினாங்கில் அத்தகைய மாணவர் காட்டிய பாசத் தினை இந்நூலில் மற்றொரு பகுதியில் (மலேயாவில்) காட்டி யிருக்கிறேன். அப்படியே காஷ்மீரில் மற்றொரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. எங்கள் குடும்பமும் டாக்டர் மு. வ. அவர்கள் குடும்பமும், எங்கள் நண்பர் இருவர் தம் குடும்பமுமாக 1957 கோடையில் காஷ்மீர் சென்றோம். வடநாட்டு மதுரை தில்லி முதலிய வற்றைக் கண்டபின் பதான்கோட்டிலிருந்து விமான மூலம் பூரீநகர் சென்றோம். அங்கே மூன்று நாள் தங்கி இருந்தோம். ஒருநாள் அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கினோம். அன்று மாலை நாங்கள் அனைவரும் கடைத்தெரு ஓரமாக மெல்லச் சென்று கொண்டிருக்கையில் இராணுவத்துறை