பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 311 எப்படியோ அந்த ஆண்டு மதுரைப்பல்கலைக்கழகம் நிறுவத் தமிழக அரசு சட்டம் இயற்றியது 1959இல் நிலையாகச் செயல்படுமுன், மதுரையில் பல முதுநிலை வகுப்புகள் முன்னோடியாக 1958இல் தொடங்கத் திட்டமிட்டது. அந்த அடிப்படையில் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலை வகுப்பு (எம். ஏ ) தொடங்கினர். அப்போதைய விதிப்படி, அதற்குமுன் சில ஆண்டுகளாயினும் முதுகலை ஆசிரியராயிருந்தவர் ஒருவர் ஆசிரியர் குழுவில் இருந்தால்தான் அந்த முதுகலை வகுப்புத் தொடங்க இயலும். எனவே, என்னைப் பற்றிக் கேட்டறிந்த தியாகராசச் செட்டியார் அவர்கள், கல்லூரிக்கு வருமாறு அழைத்தனர். ஒரிருவர் வந்து அழைத்தபோது, நான் திட்டவட்டமாக வர இயலாது என மறுத்தேன். அக்கோடையில் நான் நீலகிரியில் தங்கியிருந்தேன். அப்போது தியாகராசர் கல்லூரியின் முதல்வராக இருந்த திரு. இராமநாதப் பிள்ளை அவர்கள் அங்கே வந்து என்னைப் பிடித்தனர்; எப்படியும் ஓராண்டா யினும் வந்து, முதுகலை வகுப்பினைத் தொடங்கி நடத்த வேண்டும் என வற்புறுத்தினர். நான் சூன் முதல் வாரத்தில் சென்னை திரும்பிய பின் முடிவு சொல்வதாகக் கூறி அனுப்பி வைத்தேன். பின் சென்னைக்குச் செட்டியார் தம் மூத்த மகனாரும் அக்கல்லூரியின் தாளாளருமாகிய திரு. சுந்தரம் செட்டியார் அவர்கள் வீட்டிற்கு வந்து வற்புறுத்தினர். இங்குள்ள நண்பர்களும் வாழ்வின் மாற்றத்துக்கு இடையில் இடமாற்றம் மனத்துக்கு ஆறுதல் தரும் வகையில் ஓராண்டு சென்று வரல் நலமெனக் கூறினர். எனவே இசைந்தேன். சூன் இறுதி வாரத்தில் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் சேர்ந்தேன். - நான் அழைக்கப் பெற்றபோது, முதுகலைப் பிரிவு தனியாக இருக்குமெனவும் நான் தலைமையேற்க வேண்டு மென்றும் கூறினர். நான் இருப்பதற்கு அவர்தம் நாம்