பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*312 ஆனந்த முதல் ஆனந்த வரை பாலைக்குரிய பங்களா ஒன்றினையும் கொடுத்து உதவினர். கருமுத்து தியாகராசர் அவர்களும் என்னைக் கண்டு அன்புடன் போற்றி மகிழ்ந்தனர். ஆயினும் கல்லூரிப் பதிவேட்டில், தமிழ்த்துறையினை ஒன்றாகக் காட்டி, நான் சாதாரண ஆசிரியனாகும் நிலையில் மூன்றாமிடத்தில் என் பெயரை எழுதி வைத்தனர். அங்குப் பேராசிரியர்களாக இருந்த இருவர்தம் செயல் இது எனவும் ஒருவர் செட்டியா ரிடம் மிகுந்த செல்வாக்கு உடையவர் எனவும் எனவே அவ்வாறு நிகழ்ந்தது எனவும் கூறினர். ஆயினும் நான் அதில் கையொப்பமிட இசையவில்லை. மேலும் நான் உடன் சென்னைக்குத் திரும்பி விடுவதாகவும் கூறினேன். எனினும் செட்டியாரின் இளைய மகன் திரு. மாணிக்கவாசகம் செட்டியார் அவர்களும் விவேகானந்தர் அச்சக உரிமையாளர் பழநியப்பர் அவர்களும் தலையிட்டு, துறையினைத் தனியாகப் பிரித்து, முதுகலைக்கு என்னை உரியனாக்கித் தனி அறையும் தந்தனர். பிறகு மாணவர்களைச் சேர்த்து முதுகலை வகுப்பும் தொடங்கப் பெற்றது. கல்லூரியில் இருந்த பத்து மாதங்களிலும் அங்கே நூலகராகப் பணியாற்றிய என் மாணவர் திரு. திருமலை முத்துசாமி அவர்கள் எனக்கு உற்ற துணையாக இருந்தார். பாலாற்றங்கரையைவிட்டு, கூவம் நதிக்கரையில் வாழ்ந்து, அன்று வைகைக்கரையினை அடைந்த நிலையினை எண்ணி னேன். மதுரை வாழ்வு தாயின் கருவில் தங்கும் குழந்தையின் வாழ்வாகப் பத்து மாதங்களே அமைந்த ஒன்றாயினும் நான் அங்கே பெற்ற வாழ்க்கை அனுபவங்கள் பலப்பல. அவற்றுள் ஒருசிலவற்றை மட்டும் ஈண்டுக் குறிக்க நினைக்கிறேன். கல்லூரியில் முதல்வரும் பிற ஆசிரியர்களும் முதுகலை மாணவரும் பிறரும் என்னுடன் அன்பாகவே பழகினர். மதுரையில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள் அனைத்திலும் (ஒன்றிரண்டு தவிர) நான் அழைக்கப் பெற, சென்று