பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 ஆனந்த முதல் ஆனந்த வரை பாட்டினைப் பல வகையில் ஆய்ந்து பேசினேன். வழிகாட்டி, நாடும் நகரும், அரசும் குடியும், அகமும் புறமும், காலமும் பொழுதும், அன்பும் பண்பும் என்று தனித்தனி ஆறு தலைப்பு களிலும் பொதுவாகத் தொடக்க நாளில் தமிழ் இலக்கியத் தின் சிறப்பு-இலக்கிய வளம்-பத்துப்பாட்டின் இடம், அதன் அமைப்பு, பொதுச் சிறப்பு ஆகியவற்றை அடக்கிய ஒரு தொடக்கத் தலைப்பிலும் ஏழு சொற்பொழிவுகள் ஆற்றி னேன். அவற்றை அன்பர்கள் தொகுத்து எழுதித் தந்தனர். அவை பின் பாட்டும் பயனும் என்ற நூலாக அடுத்த ஆண்டே (1959) வெளிவந்தது. பலரும் அதை விரும்பிப் பெற்றனர். நான் மதுரையில் இருந்தபோது தான் பம்பாய் தமிழ்ச் சங்கத்தாரால் அவர்தம் பாரதி விழாவில் பேச வருமாறு அழைக்கப்பெற்றேன். அதற்கு முன் நான் தமிழ் நாட்டில் பல இடங்களிலும் இலங்கையில் பல இடங்களிலும் கல்கத்தாவி லும் சென்று பேசி உள்ளேன். என்றாலும் பம்பாய் சென்ற தில்லை. எனவே வர இசைந்தேன். பின் அதன் வெள்ளிவிழா விலும் கலந்து கொண்டேன். பின்தொடர்ந்து அந்த மராட்டிய அரசாங்கத் தேர்வில் தமிழ்த்துறைக்கு வினாத்தாள் தயாரிப்புக் குழுவின் சிறப்பு உறுப்பினனாகப் பன்னிரண்டு ஆண்டுகள் (ஆண்டுக்கு இருமுறை) சென்ற போது பலமுறை தமிழ்ச்சங்கத்திலேயே தங்கியும் இருக்கிறேன். பம்பாய் தமிழ்ச் சங்கத்தில் நான்கு நாட்கள் நான்கு தலைப்புகளிலே பாரதி யாரைப் பற்றிப் பேசினேன். அப்படியே மதுரைத் திருவள்ளுவர் கழகத்திலும் பத்துப்பாட்டினைத் தவிர்த்து வேறு தனிச் சொற்பொழிவுகள் ஆற்றினேன். வேறு பல இடங்களிலும் என்பேச்சு நிகழ்ந்தது. சில பத்திரிகைகளுக்குக் கட்டுரைகளும் அக்காலத்தில் எழுதினேன். ஒருமுறை ஒரு தமிழறிஞர் கண்ணகி மதுரையை எரித்தது தவறு என்று பத்திரிகையில் எழுதி இருந்தார். அதை நான் மறுத்து, செட்டியார் நடத்திய தமிழ்நாடு’ பத்திரிகையில் ஒருகட்டுரை