பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 315 எழுதினேன். இப்படியே என் சிறு சிறு பயணங்கள் பற்றியும்தேக்கடி, அருவி.(வீழ்ச்சி) போன்ற இடங்களுக்குச் சென்றவை. பற்றியும்-கட்டுரைகள் எழுதினேன். அவற்றையெல்லாம் தொகுத்து வையைத் தமிழ்' என்ற பெயரிலே ஒரு நூல் வெளியிட்டேன். பின் 1967.68 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அந்த நூல் சென்னைப் பல்கலைக்கழகப் பட்ட வகுப்பிற்குப் பாடநூலாக அமைந்தது. அந்த இரண்டு ஆண்டின் நூல் விற்ற வருவாயே எங்கள் வள்ளியம்மாள் கல்வி அறத்துக்கு முதல் மூலதனமாக இருந்தது. அடுத்து எனக்கு ஐம்பத்தைந்து வயது முடிந்தமையின, என் உயிர் ஒப்பந்த எல்லை முடிந்து வந்த தொகையும் எனது தெய்வீக நிதி (provident fund)யும், என் பிற நூல்களின் வருவாயும் ஊரில் உள்ள நிலங்களில் சிலவற்றை விற்ற தொகையும் சேர, அண்ணாநகரில் பள்ளி யுள்ள பரந்த நிலப்பரப்பினைப் பெறவும் உயரிய நல்ல கட்டடங்கள் கட்டவும் வாய்ப்பு உண்டாயின. அன்று முதல் என் நூல் வருவாய் அனைத்தும் கல்வி அறத்துக்கே உரிமை யாக்கப்பெற்றன. மதுரை மாநகரில் நான் இருந்தபோது, நான் பயின்ற. &5IᎢ6Ꮌ☽ ❍ அண்ணாமலைப்பல்கலைக் கழகத்திலே என். பேராசிரியரான நாவலர் சோமசுந்தா பாரதியாரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். சில கூட்டங்களில் அவர் தலைமை வகிக்க நான் பேசி இருக்கிறேன். ஒருமுறை ஒரு நாளிதழில் வந்த செய்தியைப்பற்றி அவரிடம் கூறினேன். ஒரு பெரியவர்-பல தமிழ் நூல்கள் எழுதிப் பரிசும் பாராட்டும் பெற்றவர், ஒரு மேடைப் பேச்சில். ஒன்றைச் சொல்லி, இது புராணமோ புறநானூறோ அல்ல, பொய்களைக் கொட்டு வதற்கு. உண்மையில் நடந்தது' என்று குறித்ததாகச் செய்தி அறிந்தேன். அதை அவரிடம் சொன்னேன். அவர் எப்போதும் போலுள்ள முடுக்கில் இளையா உள்ளத்தராய் அந்த மடையன் அப்படியா சொன்னான்; அங்கேயே அவன் தாடை,