பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 317 உந்துவண்டியில் சென்றதால் பயணப்படி பெறவில்லை. அதுவும் தவறாயிற்று. மற்றவர்கள் ஒரே கூட்டத்துக்கு மூன்றிடத்தும் படிவாங்குவது முறையெனப்பட்டது. இப்படி வேறு சில வேறுபாடுகள் காரணமாக நான் அக்குழுவிலிருந்து விலகி விட்டேன். கூட்டத்தில் கூடி நின்று கூடிப்பிதற்ற லின்றி நாட்டத்தில் கொள்ளாரடி என்ற பாரதியின் பாட்டின் வழியே நடப்பதுதான் இன்றைய யுகதர்மமாகும் என எண்ணுகிறேன். நான் மதுரையில் இருந்தபோது தவறாமல் மாலை வேளைகள் மீனாட்சி கோயிலுக்குச் செல்வேன். அங்கே சுற்று மண்டபங்களிலும் பொற்றாமைக் கரையிலும் சிலநேரம் அமர்ந்திருப்பேன். அங்குள்ள ஒவியங்கள். சித்திரங்கள் என் உள்ளத்தைத் தொடுவனவாக இருந்தன. இத்தகைய தெய்வ நயமும் கலைநயமும் கலந்த கோவில்களைக் காணவரும் பிற நாட்டார் இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப் பில்லையே என நினைத்தேன். இவற்றை எடுத்துக்காட்ட நல்ல ஆங்கில நூல் இல்லை என எண்ணினேன். எனவே அது பற்றி ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுத வேண்டும் என்ற அவா என்னுள் எழுந்தது. ஒரு சிலர் தமிழ் நாட்டில் உள்ள முக்கிய மான கோயில்களைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதினால் நன்றாக இருக்கும் என்றனர். எனவே அவ்வாறே திருத்தணி முதல் குமரி வரையில் உள்ளவற்றில் முக்கியமான சில கோயில்களைப் பற்றி ஆங்கிலத்தில் எழுத முடிவு செய்தேன். ஆயினும் நான் மதுரை விட்டு வருவதற்குள் அந்த எண்ணம் நிறைவேறவில்லை. ஓரளவுதான் செய்ய முடிந்தது. எல்லாக் கோயில் அதிகாரிகளுக்கும் எழுதி,கோயில் அமைப்பு, வரலாறு, படங்கள் இவற்றைப் பெற முயன்று, வேலையைத் தொடங்க, பின் ஒரிரு ஆண்டுகள் கழிந்தன. அதற்கிடையில் பம்பாயி லுள்ள பாரதிய வித்யாபவன் மாநிலங்கள் தோறும் உள்ள கோயில்கள் பற்றி வரிசையாக நூல்களை வெளியிட்டு