பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320. ஆனந்த முதல் ஆனந்தவரை யிற்று. ராஜா அவர்கள் முதலில் டாக்டர் மு.வ. அவர்களை அவர்தம் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப் பேற்றுக் கொள்ளும்படி வேண்டினார். அவர் மறுக்கவே என்னைக் கட்டாயம் அங்கே அனுப்பி வைக்கு மாறு அவரிடம் சொல்லி அனுப்பினார். அவர்களும் என்னிடம் வந்து வற்புறுத்தினர். அப்போது பச்சையப்பர் அற நிலையம் ராஜா'வின் கைப்பாவையாக இயங்கிற்று. அவர் நினைத்தால் எதையும் செய்ய முடியும். (எனக்குப் பணி தந்தவரும் அவரே) எனவே அவர் கோபத்துக்கு ஆளாகா மல் ஓரிரு ஆண்டுகள் சென்று வந்துவிடுதல் நலம் என்று 'மு.வ அவர்கள் வற்புறுத்தினார்கள். எனினும் நான் இசைய வில்லை. அதை மனத்தில் வைத்துக் கொண்டுதான் அங்கு. தியாகராசர் கல்லூரியில் இவர் எங்கும் போக மாட்டாரே' இங்கே எப்படி வந்தார்? எனக் கேட்டிருக்கிறார். அவர் கோபம் பின்னும் இருந்து கொண்டிருந்தது. டாக்டர் மு.வ. அவர்கள் 1961இல் சென்னைப் பல்கலைக்கழகம் சென்ற போது முறையாக நான் அத் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். எனினும் அவர்கள் பச்சையப்பர் அற நிலையவழி, அப்பதவிக்கு விளம்பரம் செய்து தக்கவரை நியமிக்க ஏற்பாடு செய்தார். அப்படியே நாளிதழ்களில் விளம்பரங்களும் வந்தன. நான் கலங்கவில்லை. இறைவழியே யாவும் நடக்கும் என நான் அமைதியாகவே இருந்தேன். விளம்பரத்துக்கு யாதொரு விண்ணப்பமும் வரவில்லை. வெளியே உள்ளவர்கள் நான் இங்கே இருக்கின்றமையின் விண்ணப்பம் இடவேண்டாம் என ஒதுங்கி நின்று தம் அன்பைக் காட்டினர். பிறகு அறநிலையச் செயலரும் பிறரும் வற்புறுத்தியதன் பேரில் நான் விண்ணப் பம் தந்தேன். உரியவகையில் துறைத்தலைவனாக நியமனம் பெற்றேன். இத்துடன் இக்கதை முடியவில்ைை. நான் கல்லூரியிலிருந்து ஒய்வு பெற்று, வள்ளியம்மாள் கல்வி அறத்துக்கென அண்ணா நகரில் 44 ஏக்கர் நிலம் வாங்க