பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் - 321 முயன்றபோது அவர்தம் மகனார், அண்ணாமலைப். பல்கலைக் கழக இன்றைய இணைவேந்தர் - அன்று பச்சையப்பர் அறநிலையத்தலைவர், அதைத் தடுக்கப் பெரு முயற்சி செய்தார். ஆயினும் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களும் பிறதுறை அமைச்சர்களும் உறுதியாக நின்றமை யின் நான் அந்த நிலத்தைப் பெற முடிந்தது. அன்று கலைக்கப் பெற்ற அவர்தலைமையில் அமைந்த பச்சையப்பர் அறநிலைய மும் இன்றுவரை அரசாங்க மேற்பார்வையிலேயே - அரசு நியமிக்கும் அரசாங்க ஊழியர்களாலேயே நடைபெற்று வருகிறது. எங்கோ சென்றுவிட்டேன், மன்னியுங்கள். ஒருமுறை தியாகராசர் கல்லூரிக்குச் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் அவர்கள் வந்தார்கள். பல்கலைக் கழகத்தின் 125 வது ஆண்டுவிழா அக்கழக எல்லைக்குட்பட்ட எல்லாக் கல்லூரிகளிலும் கொண்டாடப் பெற்றது. சென்னையில் சிறப்பாக முதலே கொண்டாடப்பெற, பிற கல்லூரிகளால் மெல்ல மெல்லக் கொண்டாடப் பெற்றதென எண்ணுகிறேன். அந்த ஆண்டு, தியாகராசர் கல்லூரியிலும் அக்கொண்டாட் டம் நடைபெற்றது. அதற்கென ஒரு பொருட்காட்சியும் நடைபெற்றது, அதில் நான் பல தமிழ்ப்பாடல்களில், இன்றைய அறிவியல் கருத்துக்கள் பொதிந்துள்ளமையைப் பாட்டு மூலமும் படங்கள் மூலமும் விளக்கிக் காட்சிப் பொருள்களாக வைத்திருந்தேன். அத்தகைய பாடல்களுள் ஒன்று மணிவாசகர்தம் உயிர்த்தோற்ற வளர்ச்சி பற்றியதாகும் (Evolution theory) - - "புல்லாகிப் பூண்டாய்ப்புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் 4–21 - -