பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 ஆனந்த முதல் ஆனந்த வரை செல்லாநின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்' என்ற மணிவாசகர் அடிகளுக்கு ஒப்ப, உயிர்த்தோற்ற வளர்ச்சியினைப் படமிட்டுக் காட்டியிருந்தேன். திரு. முதலி யார் அவர்கள் பொருள்காட்சிகளை ஒவ்வொன்றாகக் கண்டு கொண்டே தமிழ்த்துறை அறைக்கு வந்தார். அவரும் என்னை வற்புறுத்தி அங்கே அனுப்பியவருள் ஒருவர். எனவே, அங்கே என்னைக் கண்டதும் எப்படி இருக்கிறீர்கள்? புது இடம் பிடிக்கிறதா?’ என்று தமிழிலேயே கேட்டார்கள். அவர்தம் ஆங்கில அறிவும் தெளிவும் நாடறிந்தவை. எனினும் நான் அவரைக் காணும் போதெல்லாம் தமிழில்தான் பேசுவேன்; அவர்களும் தமிழிலேயே பதில் சொல்லுவார்கள். என் நலம் வினவியபின் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தார். மணிவாசகர் உயிர்த் தோற்ற வளர்ச்சியை ஊன்றிக் கவனித்தார். நான் அதுதான் சமய மென்று அருகில் சென்று ஐயா! இதில் ஒரு சந்தேகம் உள்ளது' என்றேன். என்ன?’ என்றார். பல்வேறு உயிர்த் தோற்ற வளர்ச்சிகளைக் கூறிக் கொண்டே வருகின்றவர் மனிதனுக்குமுன் கல்லாய்' என்று சொல்லுகிறாரே இது பொருந்துமா? எனக் கேட்டேன். உடனே அவர்களும் சிறிதும் தயக்கமில்லாமல் இது முற்றும் சரியே எனத் தமிழில் Q&mdig'all-G, ‘It is perfectly allright, it is the fossil stage என்றார். பல உயிர் உடம்புகள் உறைகல்லாய் உள்ளமையை விளக்கினார். இன்றும் ஆய்வாளர்கள் உலகில் பல்வேறு இடங்களில் பல்வேறு உயிர்களில் உறை கற்களைக் கண்டு ஆய்ந்து வாழ்வியலை-அதன் ஆயுளைக் கணக்கிடுதலைக் காண்கிறோமே, மேலும் இத்தகைய "கருத்துக்களை வெளியிட வேண்டுமெனக் கேட்டுக் கொண் டார். நான் முன்பே 1947இல் தேவாரம் பற்றி என் ஆய்வேட்டில் தேவாரத்தில் உள்ள அறிவியல் கூறுகளைத்