பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 ஆனந்த முதல் ஆனந்த வரை நூல்களையெல்லாம் அச்சிட்டார். மேலைச் சித்திரை வீதியில் புத்தகக் கடை அமைத்து என் நூல்களையும் வைத்து விற்பனை செய்தார். என் திருவள்ளுவர் கழகச் சொற் பொழிவுகளை யெல்லாம் குறிப்பெடுத்துப் பின் படி எடுத்து உதவினார். பின் பல்கலைக் கழகப் பேராசிரியரான போதும் அவர் தொடர்ந்து கடிதமூலம் தொடர்பு கொண்டிருந்தார். அவர்தம் பிள்ளைகளும் அவ்வாறே. கல்லூரி ஆங்கிலத் துறையில் பணியாற்றிய தஞ்சையைச் சேர்ந்த உப்பிலி என்பவரும் எனக்குப் பலவகையில் உதவினார். மாணவர் எண்மர் முதலாண்டில் பயின்றார்கள் என எண்ணுகிறேன். ஒருவர் பெண். ஆடவருள் காமாட்சி நாதன் என்பவர் குறிப்பிடத் தக்கவர். தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றார். இப்போதும் சென்னைக்கு எப்பொழுது வந்தாலும் வீட்டிற்கு வந்து ஒரு சில மணி நேரம் இருந்து குடும்ப வாழ்க்கை பற்றியும் நம் பள்ளி கல்லூரி பற்றியும் கேட்டு மகிழ்ந்து செல்வார். மற்றொருவர் பிரகாசம் என்பவர். அவர் தற்போது பச்சை யப்பர் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். திரைப்பட உலகிலும் கதை, வசனம் எழுதிப் புகழ் பெற்றவர். வேறொருவர் ஜம்புநாதன் என்பவர். செளராட்டிர மரபினர். எனினும் தமிழ் மீது தணியாத காதல் கொண்டு வாழ்பவர். அவருக்குச் சொந்தமான தினமணித் திரை அரங்கு' என் வீட்டின் அருகிலேயே இருந்தது. எனவே அடிக்கடி அங்கே வந்து படம் பார்க்குமாறு அழைப்பார். நான் பெரும்பாலும் செல்வதில்லை. பிள்ளைகளை அழைத்துச் செல்வார். பச்சை யப்பர் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் அப்பாவு ஜெயின் அவர்கள் அப்போது தியாகராசர் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக இருந்தார். அவரையும் மறக்க இயலாது. இன்னும் எத்தனையோ புலவர்கள்-வியாபாரி கள்-அலுவலர்கள் என் முன் நிற்கின்றனர். நாள் பல