பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 ஆனந்த முதல் ஆனந்த வரை மாதத்தில் குழந்தைகளை வரவழைத்துப் பள்ளிகளில் சேர்த்து, நானும் பழையபடியே பச்சையப்பரில் என் பணி யினைத் தொடர்ந்து தொடங்கினேன். 4. வடக்கு நோக்கி 1966 மே மாதம் ஒருநாள். எனக்கு ஐதராபாத் உஸ்மானியப் பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. பிரித்துப்பார்த்தேன். தமிழக அரசின் (அன்றைய சென்னை அரசாங்கத்தின்) பரிந்துரையின் பேரில் நான் அப்பல்கலைக் கழகத் தமிழ்துறைத் தலைவனாக நியமிக்கப் பட்டிருப்ப தாகவும் சூலையில் பல்கலைக்கழகம் திறக்கும் நாளில் வந்து சேரவேண்டும் எனவும் அதில் குறித்திருந்தது. சம்பளம் ஆயிரம் எனவும் தங்குவதற்கு ஒரு மாளிகை ஒதுக்கப் பெற்றுள்ளதெனவும் குறிப்பு இருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. தெற்கே மதுரையில் ஓராண்டு கழித்தபின் இங்கேயே அமைதியாக இருக்க எண்ணிய எனககு, இது புதிராக மட்டுமல்ல-தேவையற்றதாகவும் இருந்தது. தமிழக அரசு பரிந்துரை என்று சுட்டி இருப்பதால், அங்கே சென்றால் தகவல் அறியலாம் என எண்ணினேன். அன்று மாண்புமிகு பக்தவத்சலம் அவர்கள் தமிழக முதல்வராகவும் கல்வித்துறை அமைச்சராகவும் இருந் தனர். அவர்கள் எனக்கு நன்கு அறிமுகமானவராதலால், மறுநாள்காலை நேரே மயிலை வாரன் சாலையில் அவர்கள் இல்லம் சென்றேன். முன் அறையில் அமர்ந்து கோப்புகளை ஆய்ந்து கொண்டிருந்தார் அவர். சிலர் வெளித் தாழ்வாரத் திலும் ஒருசிலர் உள் விருந்தினர் அறையிலும் தங்கி இருந்தனர். அப்போது முதல்வரின் முதன்மைச் செயலர் கிருஷ்ணையா என எண்ணுகிறேன்-அங்கே இருந்தார்.