பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 335 முன்னரே பதிவுசெய்து ஆய்வு செய்துவந்தார். பின் பட்டமும் பெற்றார். என்னிடம் பதிவு செய்தவருள் முருகன் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. வேறு மகளிர் இருவரும் பதிவு செய்ய சனவரியில் விருப்பம் தெரிவித்தனர். நான் மார்ச்சில் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தமையின் அடுத்த ஆண்டு தக்கார் வழியே ஆய்வு செய்யுமாறு ஆற்றுப்படுத்தினேன். மாணிக்கம் அவர்கள் நான்விட்டு வந்த பிறகும், என்னிடமே தொடர்ந்து ஆய்வு செய்து பட்டத்தினைப் பெற்றார், அவ்வாண்டு பயின்ற இருமாணவர்களும் சிறப்புறத் தேர்ச்சி பெற்றனர். முதுகலை முடித்துப் பட்டம் பெற்றவர் தற்போது சென்னையில் உள்ள நேஷனல் மகளிர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். அவர் தம் மகளார் தற்போது எங்கள் வள்ளியம்மாள் கல்லூரியில் பயின்று வருகிறார். மற்றவர்களைப் பற்றித் தற்போது நான் அதிகம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை. நான் அங்கே பல்கலைக் கழகத்தே பணியாற்றி னேனாயினும் பெரும்பாலும் நகரிலுள்ள தமிழ் மக்களோடு நன்கு கலந்து பழகினேன். மணி, கோடீஸ்வ்ர முதலியார் அவர்கள் சொந்த வீடுகட்டிக்கொண்டு (மாரட்பள்ளியில்) நலமுற வாழ்பவர், என்னை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து விருந்தளிப்பர். தினத்தாள் உரிமையாளரான சகோதரர்களும் இருபள்ளிகளின் தாளாளர்களும் அடிக்கடி வந்து என்னுடன் கலந்து உரையாடுவர். நானும் நாளிதழ் அலுவவகத்துக்கும் அவர்தம் வீடுகளுக்கும் அடிக்கடி செல்வேன். அக்காலத்தில் ஆந்திர அரசின் தலைமைச் செயலாளராகத் தமிழர்-அந்தணர் ஒருவர் இருந்தார். அவரைச் சென்று கண்டு மகிழ்வேன். அவரும் அடிக்கடி வரச்சொல்லி தமிழ் இலக்கியங்கள் பற்றிக் கேட்டுக் கேட்டு மகிழ்வார். மாபூப் கல்லூரி முதல்வரான, மன்னார்குடியினைச்சேர்ந்த திரு. இராஜகோபால் என்பவரும்