பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 ஆனந்த முதல் ஆனந்த வரை தனர். தெலுங்கிற்கு அப்போது தக்கவர் இல்லைபோலும். இந்த நால்வரும் நான் இங்கிருந்தபோதே மிகவும் நெருங்கிப் பழகியவர்கள், நான் இத்தகைய மாநாட்டிற்குச் செல்வதும் இதுவே முதல் தடவை-கடைசியும் இதுதான்-பிறகு எந்தப் பல்கலைக் கழகத்திலும் பணியாற்றவில்லை அல்லவா! நான் ஐதராபாத்தில் இருந்து வந்த நண்பர்களோடு தங்கினேன். எனினும் பெரும்பாலும் சென்னை நண்பர்களோடுதான் அந்த மூன்று நாட்களையும் கழித்தேன். மாநாடு பலபிரிவு களாகப் பிரிக்கப்பெற்று, பலபொருள்களைப் பற்றி ஆய்வு செய்ய வழிவகுத்திருந்தது. தில்லி, காசி முதலிய வடநாட்டுப் பல்கலைக் கழகங்களிலிருந்து தமிழ் பயிற்றுவோரும் வந்திருந் தனர். பலப்பல பொருள்களைப் பற்றிப் பற்பல கட்டுரைகள் படிக்கப்பெற்றன. அவற்றைப் பின்னர் தொகுத்து நூலாக்கித் தருவார்கள் என்றனர். எனினும் அத்தகைய நூலினை நான் பெறவில்லை. பிறமொழியாளர்தம் நிலையும் இதுவே. பொதுவாக இந்திய மொழிகள் எவ்வாறு வளம்படுத்தப் பெறவேண்டும் என்றும் அதற்கு முதலிடம் பல்கலைக் கழகங்கள் தரவேண்டும் என்றும் அரசாங்கம் அதற்கு ஆவன செய்ய வேண்டும் என்றும் தீர்மானங்களும் நிறைவேற்றப் பெற்றன. இப்படி ஒவ்வொரு மாநாட்டிலும் தீர்மானங்கள் நிறைவேறும் போலும். ஆயினும் அவை செயலாக்கப் பெறவில்லையே. வடஇந்தியாவிலும் மராட்டிய நாடு, கன்னடநாடு போன்றவற்றிலும் அவ்வப்பகுதி மொழிகள் முதன்மொழி யாக்கப் பெற்று, அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டும் என்றும் விதிகள் ஏற்படுத்தியுள்ளனர். கன்னடநாட்டில் ஆங்கிலம், இந்தி, கன்னடம் மூன்றும் பயின்று) பின் தமிழர் வேண்டுமாயின் தமிழைப் படிக்கவும் வழிசெய்யப் பெற் றுள்ளது. மாராட்டிய நாட்டில் உயர் மட்டம், கீழ் மட்டம்’ (Eligher Level & Lower Level) as or @Gjúñours; judge