பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 341 மொழி பிரிக்கப்பெற்று, தமிழையே படிக்க விரும்புபவர் உயர் மட்டப் பாடதிட்டத்தின் படியும் மாரத்தியர் கீழ் மட்ட வகையிலும் பயிலலாம். அல்லாதார் மாற்றியும் பயிலலாம். மராத்தியர் அனைவருக்கும் மராத்தி கட்டாயமாக்கப் பெறுவது போன்று தமிழர் அனைவரும் தமிழைக் கட்டாயம் பயிலும் நிலைஉள்ளது. (இத்தேர்வுக் குழுவின் சிறப்பு உறுப்பினனாகப் பன்னிரண்டு ஆண்டுகள் நான் இருந்தமையின் அது பற்றி நன்கு அறிவேன். இது பற்றிப் பின் சிறிது விளக்கமாக எழுதுவேன்). ஆனால் இங்கே தமிழ் நாட்டிலோ அந்த நிலையில்லை. தமிழ் நாட்டில் தமிழ் பயிலாமலேயே பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடித்து எந்தப் பட்டம் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். இந்த அவல நிலை இந்தியாவின் வேறு மாநிலங்களிலும் உலகில் வேறு எந்த நாட்டிலும் காண முடியாத ஒன்று. ஒருமுறை டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் அவர்கள் தமிழை முதல் மொழி என்று கொண்டுவர முயன்றார். அதுவும் பெயருக்குத்தான் முதன்மொழியே தவிரக் கட்டாயம் இல்லை. பிற பதினான்கு மொழிகளோடு ஒன்றாகத்தான் இது அமையும். (இதை என் கல்வி எனும் கண், என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளேன்) திரு.முதலியார். அவர்கள் அத்தீர்மானத்தைப் பல்கலைக்கழக அறிஞர் குழுவில் (Academic Council) கொண்டுவந்தார். நான் அப்போது அதில் நியமன உறுப்பினனாக இருந்தேன். அவர் பெயரளவில் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக்கி, பிற மொழிகளோடு ஒன்றாகத் தமிழை முதல் மொழியாக்கி ஏட்டில் வடிப்பதையே விரும்பாத பச்சைத் தமிழர்கள் கூட அக்கூட்டத்தில் எதிர்த்தனர். மக்கள் தமிழ் உணர்வு கொண்டிருந்த காலம் அது. எனவே தன் நிலைகாக்க அத் தீர்மானத்தை எப்படியும் நிறைவேற்ற முயன்று, முதலியார்