பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் - - 343 நான் ஐதராபாத்தில் இருந்தபோது மற்றெரு முறையும் வடநாடு (U.P) செல்ல நேர்ந்தது. முதலாவது அங்குள்ள முஸ்லீம் பல்கலைக் கழகத்துக்குச் சென்றோம். அடுத்த பயணம் காசியில் உள்ள இந்துப்பல்கலைக் கழகத்துக்குச் செல்ல அமைந்ததாகும். காசி இந்துப்பல்கலைக் கழகத்திலே தமிழ் படிக்க வசதி உண்டு. எனவே அதற்கெனப் பாடநூற். குழு ஒன்று அமைக்கப் பெற்றது. அப்பொழுது அங்கே என் மாணவர் சித்தலிங்கையா பேராசிரியராகத் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். வேலூரைச் சேர்ந்த பச்சையப்பர் கல்லூரியில் தத்துவம் பயின்ற சிவராமன் என்பவர் அங்கே தத்துவப் பேராசிரியராக இருந்தார். வேறு சில துறைகளில் சில தமிழர்கள் இருந்தார்கள். காசி இந்துப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பாடநூற் குழு வில் நானும் தில்லிப்பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆறுமுகம் அவர்களும் திரு. சித்தலிங்கையாவுடன் உறுப்பினராக இருந்தோம். அக்குழுவின் கூட்டம் ஆண்டுதோறும் நடை பெறும். நான் மூவாண்டு உறுப்பினனாக இருந்தபோதிலும் இருமுறையே அக்கூட்டத்திற்குச் சென்றேன். முதற் கூட்டம் நான் ஐதராபாத்தில் இருந்தபோது நிகழ்ந்தது. எனவே அதற்கென நான் சென்றேன். முன்போல அன்பர் பலருடன் இப்பயணம் அமையவில்லை. தனியாகவே சென்றேன். வழியில் நாகபுரியில் நல்ல கமலா பழங்கள் கிடைத்தன. மாலை ஏழு மணி அளவில் 'இட்டார்சி சந்திப்பில் இறங்கி னேன். அங்கிருந்து அலகாபாத் வழியாகக் காசி செல்ல வேண்டும். அப்போதெல்லாம் தெற்கே சென்னையிலிருந்து வாரணாசியாகிய காசிக்கு இரெயில் கிடையாது. பம்பாயி லிருந்து காசி செல்லும் இரெயில்தான் நான் செல்லவேண்டும். ஏற்கெனவே பதிவு செய்திருந்த போதிலும் இடம் பெறுவது கடினம் என்றனர். அந்த வண்டி இரவு பத்து மணிக்குத்தான் வரும். எனவே அங்குள்ள உணவுச் சாலையில் உணவு