பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் - 345 இறங்கியவர்கள் ஊர்கள் அருகில் இருப்பதால் அங்கே கம்பியை இழுத்து வண்டியை நிறுத்தி, அவர்கள் இறங்கிச் செல்கிறார்கள் என்றும், அப்பகுதியில் இது சாதாரணமாக நடக்கும் ஒன்று என்றும் கூறினார். நான் அதிர்ந்தேன். இந்தியாவின் உரிமை இந்த அளவிற்குச் செல்லுகிறதோ எனத் திகைத்தேன். அப்படியே பலர் டிக்கெட் எடுக்காமலே பயணம் செய்வார்கள். நாங்கள் சென்ற முதல்வகுப்புப் பெட்டியிலும் அப்படியே ஒருவர் இருந்தார். 'டிக்கெட்' பரிசோதகர்களோ வேறு இரெயில்வே அதிகாரிகளோ இவற்றையெல்லாம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை; கவலைப் படவும் இல்லை. - இரெயிலில் வந்த அன்பர்கள் சில உண்மைகளைக் கூறினார்கள். இந்தி நாட்டுமொழி எனக் கூச்சலிடும் அப் பகுதியில் வாழும் செல்வந்தர் பிள்ளைகளெல்லாம் ஆங்கிலப் பள்ளிகளிலேதான் பயில்கின்றார்களாம். சேத்கோவிந்ததாஸ் போன்றவர் குடும்பக் குழந்தைகளும் இந்தியைவற்புறுத்தும் பல பெரிய அரசியல் தலைவர்தம் குழந்தைகளும் ஆங்கிலப்பள்ளிகளில்தான் பயில்கின்றனராம். பலர் பிள்ளை கள் மேல்நாடுகளுக்குச் செல்கின்றனராம். இவற்றைக் கேட்க நான் மிகவும் வருந்தினேன். ஆனால் இன்று தமிழ் நாட்டிலும் இதே நிலைதானே உள்ளது. அன்று (25 ஆண்டு களுக்குமுன்) இத்தனை ஆங்கிலப்பள்ளிகள் இங்கே ஏது? பொதுவாக மக்கள் வாழ்க்கை இரங்கத்தக்கதாகவே உள்ளது. பலர் ஏழைகள். அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்கு வழிதேடும் குடும்பங்களே அதிகம். ஆயினும் அவர்களில் பலர் சோம்பேறிகளாம். அது அவர்களைப் பார்க்கும்போதே தெரிந்தது. இரெயிலில் செல்லும் போதே அப்பகுதிவாழ் மக்கள் நிலையை ஒரளவு காணமுடிந்தது. இவற்றை, யெல்லாம் கண்டு கொண்டே பிற்பகல் 3 மணி அளவில்