பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 ஆனந்த முதல் ஆனந்த வரை வாரணாசி சென்றடைந்தேன். இரயிலடியில் திரு. சித்த லிங்கையா வந்திருந்தார். அவருடன் அவர் வீட்டிற்குச் சென்றோம். அந்த வீடும் அதை அடுத்துள்ள சில வீடுகளும் நம் திருப்பனந்தாள் காசிமடத்துக்குச் சொந்தமானவை. தமிழருக்குக் குறைந்த வாடகைக்கே விட ஏற்பாடு செய் துள்ளமை கண்டு மகிழ்ந்தேன். 戀 - குமாரசாமி மடத்துக்கு அன்று இரவு செல்லுமுன் மாலையில் கங்கையில் நீராடினேன். எங்கும் காணாத வகையில் கங்கை இங்கே வடக்கு நோக்கிச் (உத்தரவாகினி) செல்லுவது பெருஞ்சிறப்பாகும். காசியிலுள்ள பல கட்டங் களில் நம் தமிழருக்கும் ஒரு கட்டம்; அது கேதார கட்ட மாகும். அங்குள்ள கங்கையிலேயே நான் அன்றுமாலை மூழ்கினேன். கேதார ஈச்சுவரரைத் தரிசனம் செய்தேன் நாள்தோறும் மாலையில் அக்கோயிலில் தேவார திருவாசகம் பாடும் ஒதுவார்கள் உள்ளனர். நான் சென்றபோதும் பாட்டிசைத்தனர். இது காசி மடத்தின் மேற்பார்வையில் உள்ளது. அங்குள்ள அனைவரும் தமிழரே. பின் காசி மடத்துக்குச் சென்றோம். நான் முன்பே திருப்பனந்தாளுக்கு எழுதி இருந்தமையின் எனக்கென ஓர் அறை ஒதுக்கி வைத்திருந் தனர். அங்குள்ள மேற்பார்வையாளர் நல்ல பண்பாளராக இருந்தார். நான் சித்தலிங்கருடன் இருந்தமையால் அங்கே வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன். அப்போதுதான் மடத்திலிருந்து கிேதார ஈச்சுரருக்கு அடுத்த கால அபிடேகத் துக்குரிய பால், பழம் முதலிய பொருள்கள் வாத்தியத்துடன் எடுத்துச் செல்லப் புறப்பட்டன. நான் தமிழ்நாட்டில் கூடக் காண முடியாத இந்தச் சிறந்த மரபினையும் காசி மடத்தின் பெருமையினையும் எண்ணினேன். இதன் மூலகர்த்தாவாகிய குமரகுருபரரை எண்ணி, போற்றி வழிபட்டேன்.