பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 33 ஒரே மகனிடம் தன் தந்தையார் வைத்துப்போன பொருளைப் போக்காது பாதுகாத்து அளிக்க வேண்டுமே என்ற கவலை. இவற்றின் இடையில் நானும் பல தொல்லைகளுக்கு ஆளானது உண்டு. என் பாட்டிதான் எல்லாத் தொல்லைகளையும் சண்டை சச்சரவுகளையும் நீக்க முயற்சி செய்வாள். அதனால் அவர், தனக்கு இருவராலும் வரும் வசவுகளை எல்லாம் பொருட்படுத்தமாட்டார். எப்படியாயினும் அவர்கள் சண்டை இல்லாது சமாதானத்தோடு வாழ வேண்டும் என்பதுதான் அவர் ஆசை. என் தந்தையார் வீட்டிலுள்ள எல்லாப் பொருள்களை யும் எப்படியாவது கொண்டு சென்று மற்றவர்களுக்குக் கொடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார். அவரது நன்கொடையால் அக்காலத்தில் அவ்வூரில் நான்கைந்து குடும்பங்கள் நன்கு செழிப்பாக வளர்ந்தன. என்றாலும் என் அன்னை தன் வாழ்வை ஒறுத்துத் தியாகம் செய்தாகிலும் என் வாழ்வை வளமுறச் செய்ய வேண்டும் என்று நினைத் தவர். எனவே பொருளைக் கட்டிக் காப்பதில் கருத்தாயிருப் பார். அதனால் தந்தை வெளியில் வயல் வரப்புகளிலிருந்தும், களத்து மேட்டிலிருந்தும் நெற்கட்டுகள், நெல் மூட்டைகள் முதலியவற்றை அப்படியே தம் நண்பர்கள் வீட்டுக்கு அனுப்பி விடுவார். அங்கு வயலிடத்தே நடப்பனவற்றையும் உடனே கொண்டு வந்து அம்மாவிடம் கோள் சொல்லவும் நல்லவர் சிலர் இருந்தார்கள். எனவே அதை அறிந்த அன்னையார் சில நாட்களில் என்னையும்கூடக் களத்துக்குக் காவல் காக்க அனுப்புவார். அப்போதெல்லாம் நான் எப்படி எப்படிக் கண்காணிப்பாக இருக்க வேண்டுமென்றும் இன்னின்னார் வந்து இன்னின்ன வகையில் நெல்லையும் நெற்கட்டையும் கொண்டு செல்வார்கள் என்றும், ஆகவே விழிப்பாக இருக்க ஆ-3