பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 --S ஆனந்த முதல் ஆனந்த வரை கீழே சொல்லக் கேட்டு வந்ததாகவும் கூறினார். பிறகு நாங்கள் இருவரும் செயலர் அறைக்குச் சென்றோம். அம்மை யார் அவருக்கு என்னை அறிமுகப்படுத்தினார். நான் அவரை வணங்கி, அவர்தம் அலுவலர் (attendar) என்னைக் கண்டு அழைத்து வந்ததைச் சொல்லிப் பாராட்டினேன். பிறகு எங்கள் பணி தொடர்ந்தது. அதுவரையில் நான் செய்யவுள்ள பணியினைச் செய்த சீனிவாச ஐயர் அவர்கள் பம்பாயில் உள்ளவர் என்றும், மூப்பின் காரணமாக அவர் முடியாமை யால் என் பெயரைப் பரிந்துரைத்தார் என்றும், அவர் நான் பம்பாய் வந்தபோது, என்னோடு பழகியுள்ளவர் என்றும் கூறினார்கள். அவர்கள் பம்பாயில் ஒரு பள்ளியில் பணியாற் றியதோடு இவ்வினாத்தாள் குறிப்பில் ஐயரோடு பல ஆண்டு கள் செயல்படுகின்றார் எனவும் அறிந்தேன். பழைய வினாத் தாள்களையும் மாதிரிக்காகக் காட்டினார்கள். பாடநூல் களையும் கண்டேன். பிறகு பணி தொடங்கி இரண்டு நாட்கள் இருந்து முடித்து ஐதராபாத் திரும்பினேன். அப்போது சுமார் மூவாயிரம் பேர் அத்தேர்வுகளை எழுதி னார்கள் என்றும் இதனினும் கூடுதலாக நாகபுரிப் பகுதி யாகிய விதர்ப்பத்தில் எழுதுகிறார்கள் என்றும் சொன் னார்கள். நான் உண்மையில் மகிழ்ந்தேன். அருகிலே உள்ள உணவு விடுதியில் நல் உணவும் கிடைத்தது. சிற்றுண்டி அலுவலகத்திலேயே பெற வாய்ப்பு இருந்தது. இரண்டு நாள் பணி முடிந்தபின் செயலாளர், தலைவர், பிறரிடம் நன்றி கூறிப் புறப்பட்டேன். முன் அழைக்க வந்தவரே, எனக்கென முன்னரே பயணச் சீட்டு எடுத்து வைத்திருந்து, ரயிலடிக்கு வந்து ஐதராபாத் விரைவு வண்டியில் என்னை ஏற்றி வழி அனுப்பினார். இந்தப் பணி, பின் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் 1979 வரை நடைபெற்றது. ஆண்டுக்கு இருமுறை தேர்வு.