பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 355 எனக்குக் கல்லூரி விடுமுறையாக இருந்தமை எனக்குச் சாதக மாக அமைந்தது. இல்லையாயினும் அரசாங்கம் தனி விடுமுறை வாங்கித் தர இருந்தது. ஆனால் அதற்குத் தேவை இல்லாமல் நான் ஏப்பிரல் பிற்பகுதியில் புறப்பட்டு, சுமார் ஒன்றரை மாதம் சிங்கப்பூர் தொடங்கி பினாங்கு வரையில் பல ஊர்களைச் சுற்றி, கருத்தறிந்தும் சொற்பொழி வாற்றியும் சூன் முதல் வாரத்தில் திரும்பிவிட்டேன். அப்போது மலேயாவும் சிங்கப்பூரும் இணைந்தே இருந்தன. (இன்று தனித்தனியாகப் பிரிந்து தனித்தனி ஆட்சியில் இயங்கு கின்றன) நான் அங்கே செய்த பயணம் பற்றித் 'தமிழன் கண்ட மலேயா என்ற நூலை வெளியிட்டேன். அது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தே பட்ட வகுப்பிற்கும் பிற பல்கலைக்கழகங்களிலும் பாடமாக இருந்தது. என் சொற் பொழிவுகளை மலேயாச் சொற்பொழிவுகள் என வெளி யிட்டேன். - அப்போது விண் வழிப் பயணம் கிடையாது. எனவே கப்பல் வழியேதான் செல்ல வேண்டும். அந்த வேளையில் சென்னைக்கும் சிங்கப்பூர் மலேயாவுக்கும் சென்று வந்த இரு கப்பல்களில் ஒன்று மட்டும் செயல்பட்டது. அதுவும் எதுவோ பழுதுகாண சிங்கப்பூருக்குப் பயணிகள் இன்றே செல்ல இருந்தது. அதில் முதல்வகுப்பில், நான் ஒருவன் மட்டும் செல்ல அரசாங்கம் ஏற்பாடு செய்தது. ஒரு நாளில் அக்கப்பலில் ரஜூலா'வில் நேராகச் சிங்கப்பூருக்குப் பயணம் ஆனேன். எனது முதல் வெளிநாட்டுப் பயண்ம் இது. எனவே பல அன்பர்கள் கப்பல் துறைக்கு வந்து என்னை வழி அனுப்பினர். ஏழு நாட்கள் கப்பல் பயணம் அந்த அனுபவம் பற்றியும் பலவற்றையும் என் தமிழன் கண்ட மலேயாவில் விளக்கமாக எழுதியுள்ளேன். சிங்கப்பூரில் இந்தியத் தூதரக