பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 ஆனந்த முதல் ஆனந்த வரை மலாக்கா அருணாசலம் செட்டியார் அவர்கள் மலேயா தமிழ்ச் சங்கச் செயலராக இருந்தமையின், மலாக்காவில் மட்டுமின்றி, மலேயா, சிங்கப்பூர் முழுதும் என் பயண எல்லை வரையில் என்னோடே-இருந்து என்னோடு எல்லா ஊர் களுக்கும் வந்து ஆவன செய்தார்கள். அவருடன் அவர் தம் துணைவியாரும் அவர்தம் ஐந்து வயதான பேரப்பிள்ளையும் கூடவே வந்தனர். மலாக்காவிலிருந்து இடையில் இரண்டொரு ஊர்களில் தங்கி தலைநகரமாகிய கோலாலம்பூரை அடைந்தேன். அழகிய அந்த ஊருக்கு அப்பெயர் பொருந்தும் நிலை எண்ணினேன். அது மலாய் மொழியில் அமைந்த பெயரோ அன்றி இங்கிருந்து சென்ற தமிழர் இட்ட பெயரோ என வியந்தேன். கோலம்+ஆலும் + ஊர்' எனக் கண்டு அழகு குடியிருக்கும் ஊர் எனப் பொருள் கொண்டேன். அதை அங்கு பேசிய எனது முதல் பேச்சிலேயே விளக்கி கூறினேன் மலேயாவில் தமிழகத்து மக்கள் மிகுதியாக உள்ளனர். யாழ்ப்பாணத் தமிழர்களும் மிகுதியாகக் காணப்பட்டனர். மலேயா இரெயில்வே தலைமை அகம் அங்கேதான் இருந்தது. அதில் பணிபுரிவோரில் சிறப்பாக உயர்நிலை அதிகாரிகளில் நூற்றுக்கு எழுபத்தைந்து பேர் யாழ்ப்பாணத் தமிழர்களே யாவர். இவ்வாறே மலேயாவின் பிற இடங்களிலும் அவர் கள் ஒரளவு வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பெரும்பாலும், மலேயா சுதந்திர நாடான போது, தாமே விரும்பி இலண்டனுக்கு மாறிச் சென்றனர். அந்நாடு சுதந்திரம் பெற்ற போது, அதை ஆண்ட ஆங்கிலேயர் பிற நாட்டு மக்களை, விரும்பினால் அவர்தம் தாய்நாடு செல்லலாம் அன்றி இங்கிலாந்துக்கு வரலாம் எனக் கூறினர். யாழ்ப் பாணத்தார் பெரும்பாலோர் இலண்டனை விரும்பி அடைந்தனர்.