பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 . ஆனந்த முதல் ஆனந்த வரை சிலர் சில பதவிகளில் இருந்தனர். அவையும் மாவட்ட எல்லையிலமைந்த உயர் பதவி கூட இல்லை. எனினும் அவர்கள் மனநிறைவோடு வாழ்ந்து வந்தனர், நாகரிகம் என்ற பெயரில் நாட்டில் உலவும் அநாகரிகமும் பண்பாடற்ற செயல்களும் அவர்கள் அறியாதவை. பல ஊர்களுக்குச் செல்லும் வழிகளில் அவர்களைக் கண்டு அவர்களோடு பேசினேன். அவர்கள் தமிழிலும் நன்கு பேசுகிறார்கள். இன்று, அவர்கள் ஆளும் நிலையில் உயர்வுற்று பல உயர் நிலை களில் இருப்பதை அண்மையில் சிங்கப்பூர், மலேயா சென்ற போது கண்டு மகிழ்ந்தேன். கோலாலம்பூரில் செட்டியார் - நகரத்தார் அதிகம் இருந்தனர். பெரும்பாலும் அவர்கள் விருந்தினனாகவே இருந்தேன். "தமிழ் நேசன்' என்ற தினப்பத்திரிகையை அவர்கள் நடத்தி வந்தனர். வேறு இரண்டொரு வாரப் பத்திரிகைகளும் அன்று வெளிவந்தன. எனினும் அவர்கள் மலேயாநாட்டுக் கல்விமுறை அவர்கள் நாட்டுக் கெனத் தனியாக அமையவில்லை. பெரும்பாலும் லண்டன் மெட்ரிக் பள்ளிகளே எங்கும் இருந்தன. அந்த நாளிலேயே அந்நாடு முழுவதும் பள்ளிகள் காலை 8 மணிக்குத் தொடங்கிப் பிற்பகல் 1 மணிக்கு முடிவுறும். நம் நாட்டைப் போன்று நல்ல வெய்யில் வேளையில் இளங் குழந்தைகளை வாட்டுவதில்லை. நிலநடுக்கோட்டுக்கு அருகே இருப்பினும் - அந்நாட்டில் வெப்பம் அதிகமாவதில்லையாம். நான் சென்ற அந்தக் கோடையில் அதை நன்கு கண்டேன். கோலாலம்பூரில் நகரத்தார் மிகுதியாக இருந்தனர் என்றேன். எனவே அவர்கள் வழிபடும் கோயில்களும்பெரிதும் சிறிதுமாகப் பல இருந்தன. நான் சென்ற இடங்களி லெல்லாம் பல கோயில்களைக் கண்டேன். ஒருசில கோயில் களில்நிலைத்த அடுப்பின்மேல் பெரிய பெரிய அண்டாக்கள் அப்படியே பொருந்தி இருந்தன. அவற்றை எடுக்க முடியாது.