பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 361 பெருவிழாக்களில்-சிறப்பாகத் தைப்பூசம் போன்ற விழா நாட்களில் ஆயிரக்கணக்கானோருக்கு உணவு படைத்தல் முறையாம். அப்போது சோறு, குழம்பு, இரசம் முதலியன செய்யவே அந்த ஏற்பாடு. கீழ்ப்பக்கத்தில் திறந்து எடுக்கச் சிறு வாயில்களும் குழாய்களும் இருந்தன. விழா முடிந்தபின் அவற்றை ஆள் உள் இறங்கித்தான் துப்புரவு செய்வார்கள். எங்கோ திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற ஒளவை வாக்கின்படி பொருள் பெருக்க வந்த இடத்தில் நகரத்தார் இவ்வாறு பொருளோடு-அப்பொருள் கொண்டே அருளையும் பெருக்கும் செயல் கண்டு வியந்தேன்! போற்றினேன்! - கோலாலம்பூரினைச் சுற்றிப் பல இடங்களைக் கண்டேன். அவற்றுள் என்னைமிகவும் பற்றி ஈர்த்தது பத்து குகைகளாம். (Pathu caves). மிக மிகப் பழங்காலத்தில் அக்குகையின் கற்கள் உருகி இருக்க வேண்டும். உருகி அப்படி அப்படியே சங்கிலி போலத் தொங்கிக் கொண்டிருக்கும் அக்காட்சி மனித உள்ளத்துக்கு எட்டாத-மதிப்பிட முடியாத காட்சியாக இருந்தது. அப்படியே பூங்காவும் பிற சுற்றுச் சூழல்களும் மனத்துக்கு மகிழ்ச்சி அளித்தன. வண்ண மலர்ச் செடிகளும் பலவகைப் பழ மரங்களும் பயன் தந்தன. நம் நாட்டில் இல்லாத பலவகைப் பழங்களை அங்கே கண்டேன். உண்டேன். பல விருந்துகளில் பழங்களே முக்கிய விருந்துப் பொருள்களாக இருக்கும். இத்தகைய பழங்களை அவர்கள் நாடோறும் உண்பதால் உடல் உரம் பெற்றவர்களாக வாழ்கின்றனர். - கோலாலம்பூரில் அரசாங்க அலுவலகங்களையும், இரெயில்வே அலுவலகங்களையும் பிற அலுவலகங்களையும் சுற்றிப்பார்த்தேன். எங்கும் தமிழர்கள் சிறக்க இடம் பெற்றி ருந்தனர். அங்கே இருந்த இந்திய நாட்டுத் தூதரகக் கிளையின் பொறுப்பாளர் திரு. நடராஜப் பிள்ளை என்