பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 - ஆனந்த முதல் ஆனந்த வரை கூட்டத்துக்கு ஒரு நாள் வந்திருந்தார். பிறகு ஒரு நாள் அவர் தம் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார். விருந்துண்டேன். இவ்வாறு ஒரு வாரம் கோலாலம்பூர் ஆகிய அந்நாட்டுத் தலைநகரிலே தங்கிப் பிற ஊர்களையும் காணப் புறப்பட் டேன். கோலாலம்பூரில் மலேயா தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. கா. இராமநாதன் செட்டியார் இருந்தார். அவர் முன்பு சென்னையில் சைவசித்தாந்த சமாசத்தின் செயலாள ராக இருந்தபோது எனக்கு நன்கு அறிமுகமானவர். அவர் L16) கூட்டங்களுக்குத் தலைமை வகித்தார்; பேசினார். புறப்படும் போது அவர் வாழ்த்தி வழி அனுப்பிவைத்தார்’ கோலாலம்பூர் நாட்டின் நடுப்பகுதியில் உள்ள ஊர். எனவே தென் மேற்கில் இருந்த மலாக்கவிலிருந்து வந்த நான் வடக்கு நோக்கி என் பயணத்தைத் தொடங்கினேன். தொடங்கு முன் கோலாலம்பூருக்கு 20கல் தொலைவில் உள்ள சுவெட்டென்ஹாம் என்னும் துறைமுக நகரினையும் சிரம்பான் நகரினையும் கண்டு அங்குள்ள தமிழ்ச் சங்கங் களிலும் பேசினேன். நான் பதினைந்து அல்லது இருபது நாள் கழித்துத் தெற்கு நோக்கி, சிங்கப்பூர் செல்லுமுன் அங்கே வரும்போதும் வேறு சில நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்தனர். அக்காலத்தில் மலேயாவை ஒன்பது சுல்தான்கள் ஆண்டுவந்தனர். மலேயா மக்களும் முகம்மதிய மதத்தைச் சார்ந்தவர்களே. நண்பர்கள்-சிலாங்கூர் என நினைக்கிறேன் ஒரு சுல்தானிடம் என்னை நேர் காணலுக்கு அழைத்துச் சென்றனர். அவரும் அன்புடன் ஏற்று, அவர் குடும்பத்தவர் அனைவரையும் எனக்கு அறிமுகம் செய்துவைத்து, நல்ல விருந்தும் அளித்தார்-அவர் பயன்படுத்திய செங்கோல் ஒன்றையும் அளித்தார். இவ்வாறு கோலாலம்பூர் மக்களிடம் வாழ்ந்த நான் வடக்கே பினாங்கு நோக்கிப் புறப்பட்டேன். இடையிடையே பல சிற்றுார்களில் சில மணி நேரம் தங்கினேன். சுங்கிச்சிபுட்டில் ஒரு நாள் தங்கினேன். அவ்வூரில்