பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 ஆனந்த முதல் ஆனந்த வரை என்றும் ஒன்று இருந்தது. அதன் தலைவரும் அங்கே ஒரு வணிக அலுவலகத்தில் பணிபுரிந்த இராமநாதன் செட்டியார் என்பர். ஈப்போவில் அவர்கள் சங்கத்துக்காக ஒரு தமிழ் இதழினையும் அச்சடித்து வெளியிட்டனர் (மாதம் இரு முறை என எண்ணுகிறேன்) அவர்கள் தமிழ்ச் சங்கத்தில் என்னைப் பேசுமாறு சொன்னார்கள். நான் பேசச் சென்றேன். பெருமண்டபம்-நிறைந்த கூட்டம். கூட்டம் தொடங்கு முன் என்னை வரவேற்ற அச்சங்கச் செயலாளர் நான் விரும்பாத ஒரு செயலைச் செய்தார். ஆம்! என் பேச்சில் தமிழ் நலம் மிகுவதையும் கேட்டார்ப்பிணிக்கும் தகையதாய்-கேளாரும் வேட்பதாய் உள்ளதையும் பிற சிறப்பியல்புகளையும் கூறி, எனக்கு ஒரு பட்டம் அளித்தார். என் கலியாணத்திலேயே பட்டம் கட்டிக் கொள்ள விரும்பாதவன் நான். தமிழ் நாட்டில் அதற்குமுன் எனக்குப் பட்டம் அளிக்க வந்தவர்களை வேண்டி மறுத்தவன் யான். பின்னால் ஒரு முதலமைச்சர் தலையீட்டால் ஒரு பட்டமும் ஒரு பெருமடத்தினரால் பல ஆண்டுகள் முயன்று மறுத்து மறுத்துப் பின் இசைந்து பெற்ற பட்டமும்கூட எனக்கு உண்டு. ஆயினும் நான் அவற்றை வெளியே காட்டவும் இல்லை. போட்டுக் கொள்ளவும் இல்லை. கடந்த சில ஆண்டுகளில் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்கள் இரண்டும் அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றும் எனக்குத் தர ஏற்பாடு செய்த பட்டங்களையும் அன்புரை கூறி மறுத்தவன் நான், (இந்த ஆண்டு நம் தமிழக முதலமைச்சர் நல்ல வேளை பட்டம் இல்லாது, திரு வி. க. விருதினை அளிப்பதாலும் திரு. வி.க. வுடன் நான் கொண்ட தொடர்பு காரணமாகவும் ஏற்றுக் கொண்டேன். ஒரு வேளை பட்டமாயின் மறுத்திருக்கக்கூடும்.) திடீரென ஈப்போ தமிழ்ச் சங்கத்தார் பட்டம் அளித்துப் பட்டாடை போர்த்தி மகிழ்ந்தாலும் என்னால்