பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 365. அவர்களொடு மகிழ முடியவில்லை. பட்டம் பெறவும் அதற்கென விழா அமைக்கவும் தாமே பொருட் செலவும் செய்து நடத்தவும் முன்னின்று செயல்படுவார் வாழும் இக் காலத்தில் நான் பயித்தியக்காரனாக ஒதுக்கப்படுவேன் என அறிவேன். எனினும் மணிவாசகர் கூறியபடி உற்றாரை யான் வேண்டேன், ஊர்வேண்டேன், பேர்வேண்டேன்’ என வாழ்கின்றவன் நான். .' - ஈப்போ தமிழ்ச் சங்கத்தார் அறிவிக்க, பலர் மகிழ்ச்சியில் ஆரவாரிக்க அந்நாட்டில் அவர்களுக்கிடையில் நான் என்ன செய்ய முடியும். பின் நான் பேசியபோது அதுபற்றி ஒரு குறிப்பும் கூறாது, என் தலைப்பில் மட்டும் பேசி முடித்தேன். வீட்டிற்கு வந்ததும் திரு. ச்ெட்டியார் அவர்களிடம் நான் கொண்ட கொள்கையினைக் கூறினேன். நான் அரிதின் முயன்று பயின்று பெற்ற பல்கலைக் கழகப் பட்டங்களையே போட்டுக் கொள்ளாததைக் கூறினேன். அவரும் என் கொள்கையை ஏற்றுக்கொண்டார், பின் ஈப்போவிலிருந்து வடக்கு நோக்கிப் புறப்பட்டு, பல ஊர்களைக் கடந்து, பினாங்குத் தீவினை வந்தடைந்தோம். மலேயா நடுவில் இருக்க வடகோடியில் பினாங்கும் தென் கோடியில் சிங்கப்பூரும் தனித்தனி தீவுகளாக மலேயாவோடு இணைந்திருந்தன. சிங்கப்பூருக்கு மட்டும் தரை வழியும் இரெயில் வழியும் இருந்தன. பினாங்கிற்குச் சிறுசிறு கப்பல்தோணிகளின் மூலமே செல்ல வேண்டும். நாங்கள் சென்ற கார் அப்படியே தோணியில் ஏற்றப் பெற்று பினாங்கினைச் சேர்ந்தது. இவ்வாறே சிங்கப்பூரிலிருந்து மலாக்கா வந்த போது, அந்த உந்துவண்டியினை இவ்வாறே தோணியில் எல்லாப் பயணிகளோடு ஏற்றிக் கரை சேர்ந்ததை நினைத்தேன். .